நன்றிகள்….மீண்டுவிட்டேன்…பாதுகாப்பாக இருங்கள்.!

கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் பிரித்விராஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். தற்போது அவர் குணமடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் நடிகர் பிரித்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் எனக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துவிட்டது. இன்னும் ஒருவாரத்திற்கு மட்டும் தனிமையில் இருப்பேன் அதன் பின்னர் வழக்கமான பணிகளில் ஈடுபட உள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றி பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். Tested negative on the Antigen … Read more

நீங்கள் யார் தலையிட???விதிகளை மீறி விட்டீர்கள் பாம்பியோ… சீனா கொதிப்பு

அமெரிக்க வெளியுறத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவின் பேச்சுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா ,இந்தியா இடையே பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையிலான 2+2 பேச்சுவார்த்தையானது நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க அமெரிகாவில் இருந்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2+2 பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பேசுகையில் இந்திய இறையாண்மையை காப்பதற்காக இந்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா துணைநிற்கும் என்றும் அதிரடியாக … Read more

மீண்டு வருகிறது தமிழகம்…முதல்வர் பழனிச்சாமி தகவல்

கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிப்பதாக முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி கானொலி வாயிலாக ஆலோசனை நடத்தியனார் அப்போது முதல்வர் கூறியதாவது;- கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு வருவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றது.எதிர்க்கட்சிகள் ஒப்பிட்ட பிற மாநிலங்களில் எல்லாம் கொரோனா பரவல் தற்போது அதிகரித்துள்ளது. பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்பு விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை  உறுதி செய்ய வேண்டும். பண்டிகை காலங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும். … Read more

covid-19:இன்னுயிர் நீத்த #வீரக்காவலர்கள் -நினைவு கல்வெட்டு முதல்வர் திறப்பு

காவல் பணியின் போது கொரோனாத் தொற்றால் இன்னுயிர் நீத்த காவலர்களின் அர்ப்பணிப்பை போற்றும் விதமாக “வீரக்காவலர்கள்” நினைவு கல்வெட்டை முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார். 1959 ஆண்டு அக்21ந்தேதி தேதிலடாக் பகுதியில், சீன ராணுவத்தினரின் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் தங்கள் இன்னுயிரை நாட்டிகாக அர்ப்பணித்தனர். காவல் பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் அந்நாளை காவலர்களின் நினைவு நாளாக ஆண்டுதோறும் நாடு முழுவதும் கடைபிடிக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் காவல் பணியாற்றும் … Read more

பெருந்தொற்றின் 2வது அலை வீசத்தொடங்கியது..ஊரடங்கு அறிவிப்பு…

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின்  2-வது அலை தாக்கத்தொடங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை கொண்டு வருவது பற்றி பரிசீலித்து வருகின்றன. இந்நிலையில், நேற்று திங்கள் கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின், வரும் புதன் கிழமை முதல் அயர்லாந்தில் 6 வாரங்களுக்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்றார். கொரோனா கட்டுப்பாடுகளை எல்லாம் மதித்து செயல்பட வேண்டும் அவ்வாறு செயல்பட்டால் தான் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாட … Read more

ஜோபிடனுக்கு கொரோனாத் தொற்று???

அமெரிக்காவில் நவ.,3 தேதி ஜனாதிபதி தேர்தலில் நடைபெறுகிறது.குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் 2வது முறையாக போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.  கடந்த அக்.,1ந்தேதி அதிபர் டிரம்புக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு ராணுவ மருவத்துவமனையில் 4 நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் தொற்றில் இருந்து அவர் முழுமையாக மீண்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்த நிலையில் ட்ரம்ப் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட … Read more

அமமுக பொருளாளர் வெற்றிவேல் கவலைக்கிடம்!தீவிர சிகிச்சை!

கொரோனாத் தொற்று  உறுதி செய்யப்பட்ட அமமுக பொருளாளர் வெற்றிவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியான தகவல்: கடந்த அக்.,10ந்தேதி அமமுக பொருளாளர் வெற்றிவேலுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். அமமுக மாவட்ட நிர்வாகிகளுடன் பொருளாளர் வெற்றிவேல் சென்னை சில நாட்களாகவே ஆலோசனை நடத்தினார்.இந்நிலையில் தான் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் … Read more

கொரியாவில் கொரோனாவே கிடையாது அதிபர் கிம் ஜங் -ஷாக்கில் சர்வதேசம்

நாட்டில் யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்து உலக நாடுகளை அதிர்ச்சியாக்கியுள்ளார். சீனாவில்  ஹூபேய் மாகாணம் வுகான் நகரத்தில்  கடந்த ஆண்டு டிசம்பரில் உலகையே அச்சிறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ்  கண்டுபிடிக்கப்பட்டது.இது தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது. இத்தகைய கொடிய வைரஸ் 3 கோடிக்கும்  அதிகமானோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்றுக்கு இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா விவகாரத்தில் கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு … Read more

அமமுக பொருளாளர் வெற்றிவேலுக்கு-கொரோனாத்தொற்று!சிகிச்சைக்கு அனுமதி

அமமுக பொருளாளர் வெற்றிவேலுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியான தகவல்: அமமுக மாவட்ட நிர்வாகிகளுடன் பொருளாளர் வெற்றிவேல் சென்னை சில நாட்களாகவே ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்நிலையில் பொருளாளர் வெற்றிவேலுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

ட்ரம்ப் டை..தெறித்த ட்வீட்ஸ்…டெலிட் செய்து ட்வீட்டர் அதிரடி..!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மரணமடைய விரும்புவதாக வெளியிடப்பட்ட ட்விட்டரில் வெளியான பதிவுகளை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளதை அடுத்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட டிரம்ப் மரணமடைய வேண்டும் என்ற பதிவுகள் ட்விட்டரில் வெளியானது.உடனடியாக இதனை ட்விட்டர் நிறுவனம் இதனை நீக்கி உள்ளது. இந்த நடவடிக்கை குறித்து  ட்விட்டர் கூறுகையில்:- ஒருவர் மரணம் அடைய வேண்டும் என்றோ, மரணம் அடையக்கூடிய நோயால் பாதிக்கப்பட வேண்டும் என்றோ பதிவிடுவது தங்கள் கொள்கைகளுக்கு எதிரானது என்று கூறியுள்ள ட்விட்டர் நிறுவனம்  … Read more