ஹெர்னியா அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் பழனிச்சாமி!

குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி அவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் நேற்றைய தினம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்கம் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சை … Read more

வெற்றி மேல் வெற்றி வரட்டும் முதல்வர் வாழ்த்து

தமிழக மக்க ளுக்குஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விழாவிற்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரித்துள்ளார். தமிழ்க மக்களுக்கு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மனித வாழ்வில் ஏற்றம் பெற ஆற்றல் , செல்வம், கல்வி இன்றியமையாதது.சிறப்புமிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை கொண்டாடும் மக்கள் வாழ்வில் வெற்றிமேல் வெற்றி பெற்று சீரோடும் சிறப்போடு வாழ்ந்திட வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். நாளை ஆயுதபூஜை தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

covid-19:இன்னுயிர் நீத்த #வீரக்காவலர்கள் -நினைவு கல்வெட்டு முதல்வர் திறப்பு

காவல் பணியின் போது கொரோனாத் தொற்றால் இன்னுயிர் நீத்த காவலர்களின் அர்ப்பணிப்பை போற்றும் விதமாக “வீரக்காவலர்கள்” நினைவு கல்வெட்டை முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார். 1959 ஆண்டு அக்21ந்தேதி தேதிலடாக் பகுதியில், சீன ராணுவத்தினரின் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் தங்கள் இன்னுயிரை நாட்டிகாக அர்ப்பணித்தனர். காவல் பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் அந்நாளை காவலர்களின் நினைவு நாளாக ஆண்டுதோறும் நாடு முழுவதும் கடைபிடிக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் காவல் பணியாற்றும் … Read more

அதிமுக-வின் 49வது ஆண்டு தொடக்க விழா-!

அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதிமுகவின் 49ஆம் ஆண்டு தொடக்க இன்று கொண்டாடப்படுகிறது.அதிமுக தொடங்கி 49 ஆண்டுகளை தொட்டுள்ளது.இவ்விழாவை முன்னிட்டு முதல்வர் பழனிச்சாமியின் சொந்த ஊரான சேலம் சிலுவம்பாளையத்தில்  அதிமுக கட்சியின்  கொடியை முதல்வரும், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி ஏற்றி வைத்தார்.முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயல‌லிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பிரபல மருத்துவர் கே.வி திருவேங்கடம் மறைவு – முதல்வர் பழனிசாமி இரங்கல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல மருத்துவர் திருவேங்கடம் நேற்று மரணம் அடைந்தார். தி.நகரில் தங்கி இருந்த திருவேங்கடம் கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இந்நிலையில், இவரது மறைவு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். அதில், பிரபல மருத்துவர், மருத்துவ துறையில் பேராசிரியராக வும் பணியாற்றிய மருத்துவர் கே.வி திருவேங்கடம் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு … Read more

இன்று தென்னக காந்தியின் 45வது நினைவு தினம்-முதல்வர் புகழாரம்

இன்று கல்விகண் திறந்த  கர்மவீரர் காமராஜர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்று ஒவ்வொரு பிள்ளையும் கையில் ஏடு தூக்க காரணமாக இருந்தவர்.தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவிற்கே தலைவர்களை உருவாக்கி தந்தவர். நாட்டிற்காக கண் துயில் கொள்ளமால் பல வருடங்கள் உண்மையாகவும், உன்னத மனிதராகவும், கடைசி காலக்கட்டத்தில் கூட நாட்டிற்காகவே உழைத்தவர் தனக்கென்று துணைக்கொண்டு வாழாமல் பாரதத்தை துணையாக கொண்டு வாழ்ந்த மாமனிதர். அரசியலில் தன் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் கடைமையாற்றிய கருப்பு காந்தி.அவரை இன்னாளில் எல்லோரும் நினைவில் கொள்வோம். … Read more

15 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதை வழங்கினார் முதல்வர் பழனிசாமி.!

சென்னையில் உள்ள 15 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கௌரவித்துள்ளார். தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கி சிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருதை சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் வைத்து எடப்பாடி பழனிசாமி வழங்கி கௌரவித்துள்ளார். அதில் மாநில நல்லாசிரியர் விருதிற்காக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 375 ஆசிரியர்கள் தேர்வாகி இருந்தனர். மேலும் சென்னையில் மட்டும் 15 ஆசிரியர்களுக்கு மாநில … Read more

விரைவில் குணமடைய அமித்ஷாவிற்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி.!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமித்ஷா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார். கடந்த 3-4 நாட்களாக சோர்வு மற்றும் உடல் வலி காரணமாக மீண்டும் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை … Read more

சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்.!

சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்கள் உடல் உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். சர்வதேச உடல் உறுப்பு தானம் என்பது மற்றவர்களின் உயிரை காப்பாற்ற தாமாக முன்வந்து தனது உடல் உறுப்புகளின் ஒரு பகுதியை கொடுத்து உதவும் நற்செயலாகும். மண்ணில் மங்கி போகும் உடல் ஒருவருக்காவது உதவும் என்றால் உலகில் இதைவிட பெரிய நற்செயல் எதுவும் இருக்காது. அந்த வகையில் சர்வதேச உடல் உறுப்பு தான … Read more

பள்ளிகள் திறப்பு எப்போது ? முதலமைச்சர் பழனிசாமி பதில்

எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசுகையில், எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சேலத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பாலங்கள் அமைக்கப்படும்.சேலத்தில் சாலை விரிவாக்க பணிகளும் தொடங்கப்பட உள்ளது.கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு … Read more