டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் சல்யூட்.!

கொரோனாத் தொற்று குணமடைந்தது ராணுவ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப். தனி ஹெலிகாப்டர் மூலம் வெள்ளை மாளிகைக்கு வருகைத்தந்தார்.

வெள்ளைமாளிகை மேல் தளத்திற்கு சென்ற டிரம்ப் முகக்கவசத்தை கழற்றி சல்யூட் அடித்து தனது ஆதரவாளர்களுக்கும், அமெரிக்க மக்களுக்கும் நன்றி தெரிவிப்பது போல அவரது செய்கை இருந்து.

கடந்த வெள்ளியன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சனிக்கிழமை ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி உடல்நலம் குறித்து மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டு வந்தனர்.இதனிடையே தனது உடல்நிலை குறித்து விளக்கி டொனால்ட் ட்ரம்ப் வீடியோ ஒன்றை வெளியிட்டார் அதில், நலமாக தான் இருப்பதாகவும், விரைவில் பணிக்கு திரும்புவேன்,நம்பிக்கையுடன் இருப்பதாகவும் ,நான் விரைவில் வீடு திரும்பிவிடுவேன் என்று நம்புகிறேன். மீண்டும் பிரச்சாரப் பணிகளை முடிக்க விரும்புகிறேன். உலகம் முழுக்க லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த கொரோனாவை நாம் வீழ்த்த வேண்டும் என்று ட்ரம்ப்  வீடியோவில் கூறிய நிலையில் திடீரென்று மருத்துவமனையில் இருந்து காரில் வெளியே வந்து தனது ஆதரவாளர்களை குஷி படுத்தும் வகையில் கையசைத்தார்.

 

 

இந்த நிலையில் ட்ரம்ப் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். ஆக்சிஜன் அளவு சீராக இருந்ததாகவும் மூச்சுத்திணறல் எதுவும் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் கூறிய நிலையில் தொற்றில் இருந்து முற்றிலும் ட்ரம்ப் ‘ குணமடைந்தாக ‘வால்டர் ரீட் மருத்துவ மையத்தில் இருந்து வீடு திரும்புகிறேன். நான் நன்றாக இருக்கிறேன். யாரும் கோவிட் தொற்றுக்கு அச்சம் அடைய வேண்டாம். உங்களது வாழ்க்கையை கொரோனா ஆக்கிரமிக்க அனுமதிக்காதீர்கள்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் நல்ல மருந்துகளை மேம்படுத்தி உள்ளோம். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது நன்றாக இருக்கிறேன் என்று பதிவிட்டார். தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் விரைவில் பங்கேற்பேன் என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

author avatar
Kaliraj