கர்நாடகத்தில் 10 நாட்களில் 499 குழந்தைகளுக்கு கொரோனா..!

கர்நாடகத்தில் கடந்த 10 நாட்களில் 499 குழந்தைகளுக்கு கொரோனா  பாதிப்பு ஏற்பட்டதாக கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா  இரண்டாம் அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் கடந்த 10 நாட்களில் 499 குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்று பாதித்த குழந்தைகளில் 88 பேர் 0 முதல் 9 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் 305 … Read more

குழந்தைகளுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டம்..!

குழந்தைகளுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தவுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். கொரோனாவின் இரண்டாம் அலை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பரவும் வீதம் சற்று குறைந்துள்ளது இருந்தபோதிலும் கொரோனாவின் மூன்றாம் அலை தொடங்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.  மேலும் இந்த மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் தடுப்பூசிகளை தேவையான அளவு கையிருப்பு வைக்கவும் கூறி வருகின்றனர். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்தில் அமைச்சர் மன்சுக் மாண்டவியா குழந்தைகளுக்கு … Read more

2020 ஆம் ஆண்டில் 3 மில்லியன் இந்திய குழந்தைகள் டிடிபி முதல் தடுப்பூசியை பெறவில்லை-உலக சுகாதார நிறுவனம்..!

இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு மூன்று மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் டிப்தீரியா-டெட்டனஸ்-பெர்டுசிஸ் என்ற டிடிபி தடுப்பூசியின் முதல் தவணையை பெறவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது கிட்டத்தட்ட 3.5 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் டிடிபி முதல் தவணையை தவறவிட்டதாகவும், 3 மில்லியன் குழந்தைகள் தட்டம்மை தடுப்பூசியை பெற தவறியதாகவும் கூறப்பட்டுள்ளது. டிடிபி தடுப்பூசி என்பது மூன்று வகையான தொற்று நோய்களுக்கு எதிராக போடப்படும் தடுப்பு மருந்து. டிப்தீரியா, டெட்டனஸ், … Read more

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதே பள்ளிகளை திறப்பதற்கு வழி – எய்ம்ஸ் தலைவர்..!

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதே பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு வழி வகுக்கும் என்று எய்ம்ஸ் தலைவர் தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா, குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தான் பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கும், குழந்தைகளின் வெளிப்புற நடவடிக்கைகளுக்கும் வழியாகும் என்று தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது என்பது ஒரு மைல்கல் சாதனையாகும். 2 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு பாரத் பையோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவாக்ஸின் தடுப்பூசியின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட சோதனை … Read more

#Breaking : பள்ளி குழந்தைகளை பாலியல் வன்முறையிருந்து பாதுகாப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பள்ளி குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக்கல்வி வாரியங்களைச் சார்ந்த(Education Boards) அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்நெறிமுறைகள் பொருந்தும்.மாணவர் பாதுகாப்பைத் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்யவும், அது சார்ந்த நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடு செய்யவும், ஒவ்வொரு பள்ளியிலும், “மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு” அமைக்கப்படும். இக்குழுவில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர் இருவர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் இருவர், பள்ளி நிருவாக உறுப்பினர் ஒருவர், ஆசிரியரல்லாத … Read more

மும்பையில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளுக்கு கண்கள் நீக்கம்!

மும்பையில் 3 குழந்தைகளுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பால் கண்கள் பாதிப்படைந்துள்ளதையடுத்து, அவர்களது உயிரைப் பாதுகாக்கும் பொருட்டு கண்கள் நீக்கப்பட்டுள்ள சோகமான சம்பவம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிக அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனால் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சிக்கலாக தற்பொழுது கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகிறது. கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட பலர் உயிரிழந்துமுள்ளனர். இந்நிலையில் மும்பையில் கருப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளுக்கு கண்கள் … Read more

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனை-சீரம் நிறுவனம் அறிவிப்பு..!

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்க இந்தியாவின் சீரம் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் தீவிர பணியை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் கோவாக்ஸின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஜனவரி மாதம் 16 ஆம் தேதி தொடங்கப்பட்ட தடுப்பூசி பணி, முதலில் மருத்துவப் பணியாளர்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும் செலுத்தப்பட்டது. தற்போது 18 வயதிற்கு மேல் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் … Read more

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் செலுத்தும் திட்டத்தை நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் வங்கி கணக்கில் 5 லட்சம் வைப்பு நிதியாக வைக்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்த திட்டத்தை முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், பல குழந்தைகள் பெற்றோர்களை இழந்து அனாதைகளாக்கப்பட்டுள்ள நிலையில், குடும்பத்தினரின் ஆதரவு இழந்து தவிக்கின்றனர். இது போன்ற ஆதரவற்ற குழந்தைகள் காக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வலுத்து வந்த … Read more

விரைவில் குழந்தைகளுக்கான நாசி ஸ்ப்ரே தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் – ரஷ்யா!

ரஷ்யாவில் குழந்தைகளுக்கான நாசி ஸ்பிரே தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என ரஷ்யாவை சேர்ந்த கமேலியா நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கொரோனாவின் தாக்கம் மிக அதிக அளவில் காணப்படுகிறது. எனவே கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு நாடுகளிலும் தங்கள் நாட்டில் கண்டறியப்பட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் … Read more

கொரோனாவால் தமிழகத்தில் 1,400 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்!

கொரோனாவால் தமிழகத்தில் 1,400 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஏற்கனவே தமிழக அரசு சலுகைகளையும் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பெருமளவில் பரவி வருவதுடன், உயிரிழப்புகளையும் அதிகளவு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியா முழுவதும் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் அதிகளவிலான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. அது போல தமிழகத்திலும் கொரோனாவால்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து … Read more