குழந்தைகளுக்கு ‘முகக்கவசம்’ அவசியமில்லை – சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகள்..!

5 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிய வேண்டிய தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று பாதிப்பும், உயிரிழப்பு எண்ணிக்கையும் ஊரடங்கால் சற்று குறைய ஆரம்பித்துள்ளது. தற்போது 18 வயதிற்குள் இருப்பவர்களுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறையின் சுகாதார சேவைகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தும் ரெம்டெசிவர் மற்றும் பிற கொரோனா மருந்துகள் குழந்தைகளுக்கு வழங்க … Read more

கொரோனாவால் இத்தனை குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனரா! தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் தகவல்!

இதுவரை நாடு முழுவதும் கொரோனாவால் 1,742 குழந்தைகள் தாய், தந்தை இருவரையும் இழந்துள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் தானாகவே முன்வந்து விசாரித்து வரும் நிலையில், இது குறித்து கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின் பெற்றோரை இறந்த குழந்தைகளின் விபரம் மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய எடுக்கப்பட்டுள்ள … Read more

இனி பெற்றோர் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீனா அரசு அனுமதி..!

சீன அரசு  ஒரு தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது என்று அரசு நடத்தும் செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட  சீனாவில் மக்கள் தொகை சரிவை கண்டதாக சமீபத்தில் ஆய்வில் வெளியான தகவல்களுக்குப் பிறகு திருமணமான ஒரு தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் வரை இருக்கலாம் என்று சீனா இன்று  அறிவித்துள்ளது. ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தின் போது இந்த மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அரசு … Read more

#Breaking: முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் நன்றி….!

கொரோனா தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு,அதிமுக ஒருங்கிணப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனாவால் பெற்றோர்களை இழந்து ஏராளமான குழந்தைகள் அதரவின்றி உள்ளனர். இதன்காரணமாக,கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கியில் 5 லட்சம் வைப்புத் தொகை செலுத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மேலும், பெற்றோர்களை இழந்த … Read more

பெற்றோர்களே..!கொரானா மூன்றாம் அலையிலிருந்து குழந்தையை பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!

கொரோனா 3 ஆம் அலையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க பின்வரும் முன்னெச்சரிக்கை முறைகளை கடைபிடியுங்கள். இந்தியா முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவலானது தீவிரமடைந்துள்ள நிலையில்,மத்திய ஆராய்ச்சியாளர்கள் குழு கொரோனா 3 ஆம் அலை பற்றிய கணிப்புகளை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. அதன்படி,இந்தியாவில் கொரோனா பரவலின் 3 ஆம் இலை இன்னும் 6 முதல் 8 மாதங்களில் நாட்டில் ஏற்படலாம் என்றும்,இந்த மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் மத்திய அரசின் வல்லுநர் … Read more

கொரோனவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் மறுவாழ்வுக்கான மத்திய அரசின் வழிமுறைகள் வெளியீடு!

கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கக்கூடிய குழந்தைகளின் மறுவாழ்வுக்கான வழிமுறைகளை மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதிலும் கொரோனாவின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் ஆதரவற்று தனித்து விடப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் பெற்றோரை இழந்து உள்ள குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் … Read more

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் நிதி – ஆந்திர முதல்வர்!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தினமும் புதிதாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில், ஆந்திராவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதுவரை ஆந்திராவில் 14 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், … Read more

2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மாஸ்க் அணியவேண்டும் – ஒடிசா அரசு..!

2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வந்தால், அவர்கள் முகமூடி அணிய வேண்டும் என்று ஒடிசா அரசு கூறியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,43,144 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 2,40,46,809 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து, ஒரே நாளில் 4,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 2,62,317 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,44,776 பேர் கொரோனாவில் … Read more

கொய்யாவில் குழந்தைகளுக்கே இவ்வளவு நன்மை இருக்கிறதா! வாருங்கள் அறிவோம்!

பழங்கள் என்றாலே அதை இயற்கை வரம் என்று இன்னொரு வார்த்தையாலும் குறிப்பிடலாம். ஏனென்றால், நமது உடலில் காணப்படக்கூடிய குறைபாடுகளையும் தேவையற்ற கிருமிகளையும் அகற்றுவதற்கான அனைத்து மூலப்பொருட்களும் சத்துக்களும் பழங்களில் உள்ளது. அதிலும், கொய்யாப் பழத்தில் உள்ள மருத்துவ நன்மைகள் மற்றும் சிறப்பு குணங்கள் அதிகம். குழந்தைகளுக்கு அது எவ்வளவு பயன் தருகிறது என்பது குறித்தும் இன்று நாம் பார்க்கலாம் வாருங்கள். கொய்யாவின் மருத்துவ நன்மைகள் கொய்யாப்பழத்தில் அதிக அளவில் கால்சியம், வைட்டமின் பி, வைட்டமின் சி மெக்னீசியம், … Read more

43% குழந்தைகள் கொரோனாவிற்கு எதிராக ஆன்டிபாடிகளை கொண்டுள்ளன – ஆய்வில் தகவல்.!

பெரியவர்களுடன் ஒப்பிடும்போது குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக ஒரு தனித்துவமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளது என்று ஒரு புதிய ஆய்வில் தெரிவியவந்துள்ளது. குழந்தைகளின் நோயெதிர்ப்பு அமைப்புகள் பொதுவாக குளிர்காலத்தில் தொற்றுநோய்களின் ஒரு வகை ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன என்று நிபுணர்கள் கண்டுபிடித்தனர். இது, அவர்களுக்கு நோய்க்கு எதிராக ஒரு அளவிலான பாதுகாப்பை அளிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், 300 க்கும் மேற்பட்ட பெரியவர்கள் மற்றும் 48 குழந்தைகளின் இரத்த மாதிரிகளை ஆய்வு செய்து, அதனை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட … Read more