குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனை-சீரம் நிறுவனம் அறிவிப்பு..!

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்க இந்தியாவின் சீரம் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் தீவிர பணியை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் கோவாக்ஸின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஜனவரி மாதம் 16 ஆம் தேதி தொடங்கப்பட்ட தடுப்பூசி பணி, முதலில் மருத்துவப் பணியாளர்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும் செலுத்தப்பட்டது.

தற்போது 18 வயதிற்கு மேல் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் குழந்தைகளுக்காக நோவாவாக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதனை வருகிற ஜூலை மாதத்திலிருந்து குழந்தைகளுக்கு பரிசோதிக்க இருப்பதாக திட்டமிட்டுள்ளது.