மூன்றாம் அலையின் ஆரம்பத்தில் உள்ளோம்-உலக சுகாதார நிறுவனம்..!

நாம் கொரோனா மூன்றாம் அலையின் ஆரம்ப கட்டத்தில் உள்ளோம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளதாவது, டெல்டா வகை கொரோனா பரவி வருகிறது. தற்போது துரதிருஷ்டவசமாக நாம் மூன்றாம் அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்த கொரோனா வைரஸ் மேலும் மாற்றமடைந்து உருவாகி வருகிறது. டெல்டா வகைகளில் உருமாற்றம் அடைந்து பல வகை கொரோனா பரவும் அபாயம் இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த டெல்டா வகை … Read more

2020 ஆம் ஆண்டில் 3 மில்லியன் இந்திய குழந்தைகள் டிடிபி முதல் தடுப்பூசியை பெறவில்லை-உலக சுகாதார நிறுவனம்..!

இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு மூன்று மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் டிப்தீரியா-டெட்டனஸ்-பெர்டுசிஸ் என்ற டிடிபி தடுப்பூசியின் முதல் தவணையை பெறவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது கிட்டத்தட்ட 3.5 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் டிடிபி முதல் தவணையை தவறவிட்டதாகவும், 3 மில்லியன் குழந்தைகள் தட்டம்மை தடுப்பூசியை பெற தவறியதாகவும் கூறப்பட்டுள்ளது. டிடிபி தடுப்பூசி என்பது மூன்று வகையான தொற்று நோய்களுக்கு எதிராக போடப்படும் தடுப்பு மருந்து. டிப்தீரியா, டெட்டனஸ், … Read more

2 வெவ்வேறு தடுப்பூசிகளை கலந்து செலுத்தினால் ஆபத்து வரலாம்-உலக சுகாதார நிறுவனம்..!

இரண்டு வெவ்வேறு விதமான தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்தினால் ஆபத்து ஏற்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு சில நாடுகளில் இரண்டு வெவ்வேறு விதமான தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்தியதால் நல்ல பலன் கிடைத்திருப்பதால், இப்படி செலுத்துவது குறித்த எண்ணம் உருவாகியுள்ளது. தற்போது உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளதாவது, கொரோனா தடுப்பூசியின் இரண்டு தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவது என்பது முறையானதல்ல. இதற்கு உலக சுகாதார நிறுவனம் ஒரு முடிவுக்கு வரவில்லை. இதற்கான … Read more

தடுப்பூசி போடாதவர்களுக்கு டெல்டா வகை கொரோனா வேகமாக பரவ வாய்ப்பு-உலக சுகாதார அமைப்பு..!

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தாதவர்களிடம் டெல்டா வகை கொரோனா வேகமாக பரவ வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து விடுபட தடுப்பூசி செலுத்தும் பணியை நாடுகள் முன்னெடுத்துள்ளது. கொரோனா வைரசும் உருமாறி டெல்டா, டெல்டா பிளஸ் என்று பரவி வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், கொரோனா வைரஸ் வகைகளிலே டெல்டா வகை கொரோனாவுக்கு அதிக … Read more

வாக்களித்தபடி சீரம் நிறுவனம் தடுப்பூசியை கோவாக்ஸ் அமைப்புக்கு வழங்க வேண்டும் – WHO தலைவர்!

கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறைந்த பின்பு சீரம் நிறுவனம் பிற நாடுகளுக்கும் தடுப்பூசியை வழங்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அவர்கள் கூறியுள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அவர்கள் இணையம் வழியாக செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் கீழ் கோவாக்ஸ் அமைப்பு செயல்படுவதாகவும், இந்த அமைப்புக்கு தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் தாங்களிடம் செய்து … Read more

நோயெதிர்ப்பு சக்தி பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் என்பது வரலாற்றிலேயே கிடையாது – WHO தலைவர் டெட்ரோஸ்!

நோயெதிர்ப்பு சக்தி பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் என்பது வரலாற்றிலேயே கிடையாது என WHO தலைவர் டெட்ரோஸ் கூறியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு இதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். இருப்பினும் ரஷ்யாவில் மட்டுமே இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளும் தடுப்பூசி ஆய்வின் இறுதிக்கட்டத்தில் … Read more

ஆராய்ச்சியில் உள்ள எந்த கொரோனா தடுப்பூசியும் செயல்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை – WHO டெட்ரோஸ்!

ஆராய்ச்சியில் உள்ள எந்த கொரோனா தடுப்பூசியும் செயல்படும் என்பதற்கு எங்களிடம் எந்த உத்தரவாதமும் இல்லை என WHO தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் பல நாடுகளில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த கொரோனா தடுப்பூசி விரைவில் வெளியிடப்படும் என பல நாடுகளில் அறிவிக்கப்பட்டு கொண்டிருப்பதால் மக்கள் விரைவில் நாம் கொரோனாவிலிருந்து குணம் … Read more