#Breaking:15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி – தமிழக அரசு செய்த ஏற்பாடு!

15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு பள்ளிகளிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15 – 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி முன்னதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து,15- 18 வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட https://www.cowin.gov.in/  COWIN செயலியில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என கோவின் தலைவர் ஷர்மா தெரிவித்த நிலையில்,இதற்கான முன்பதிவு கோவின் … Read more

சுற்றுலா பேருந்து விபத்து – குழந்தைகள் உட்பட 45 பேர் பலி!

பல்கேரியா நாட்டில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளாகியத்தில் குழந்தைகள் உட்பட 45 பேர் பலியாகியுள்ளனர். பல்கேரியா நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள சோபியா எனும் நகரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்துக்கு பின் பேருந்து தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இந்த விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 45 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். மேலும் 7 பேர் மீட்கப்பட்டு சோபியா நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக … Read more

மேற்கு வங்கம் : சுவாச பிரச்சனை, காய்ச்சலால் 9 குழந்தைகள் உயிரிழப்பு!

மேற்கு வங்கத்தில் கடுமையான சுவாச பிரச்சனை மற்றும் காய்ச்சலால் 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமே தற்பொழுது வரை குறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில பகுதிகளில் தொடர்ச்சியாக பல்வேறு குழந்தைகள் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால்  பாதிக்கப்பட்டு உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். அதிலும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜல்பைகுரி என்னும் மாவட்டத்தில் கடுமையான சுவாசப் பிரச்சனை மற்றும் காய்ச்சல் காரணமாக … Read more

ஆப்கன் குழந்தைகளும் நமது குழந்தைகளே..!-கைலாஷ் சத்யார்த்தி..!

ஆப்கன் குழந்தைகளும் நமது குழந்தைகளே என்று நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்துள்ளார். வன்முறை அபாயத்தில் இருக்கும் குழந்தைகளைப் பாதுகாப்பதில் பல ஆண்டுகள் பணியாற்றியதற்காக 2014 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற சத்யார்த்தியை, ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வெள்ளிக்கிழமை அன்று எஸ்டிஜி வழக்கறிஞராக நியமித்தார். இந்நிலையில் கைலாஷ் சத்யார்த்தி தற்போது தெரிவித்துள்ளதாவது, தலிபான் ஆட்சியின் கீழ் மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில், ஆப்கானிஸ்தான் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் … Read more

போதிய உணவின்றி ஆப்கானிஸ்தானில் 1 கோடி குழந்தைகள் தவிப்பு…!

ஆப்கானிஸ்தானில் போதிய உணவின்றி 1 கோடி குழந்தைகள் தவித்து வருவதாக யுனிசெப் அமைப்பு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.  ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் நாட்டிலிருந்த பிற நாட்டை சேர்ந்த மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருக்கக்கூடிய ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் போதிய அளவு உணவு, மருந்து மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இன்றி தவித்து வருவதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இது … Read more

சுவாச பிரச்சனை : மருத்துவமனையில் 60 குழந்தைகள் அனுமதி; 3 பேர் உயிரிழப்பு!

மேற்கு வங்கத்தில் சுவாச பிரச்சனை மற்றும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சனை காரணமாக 60 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், ஏற்கனவே சுமார் 200 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பல பகுதிகளிலும் தொடர்ந்து இது போன்று குழந்தைகள் சுவாசப் பிரச்சனை இருமல், சளி, காய்ச்சல் ஆகியவற்றால் குழந்தைகள் … Read more

தினமும் 40-50 குழந்தைகள் வரை மருத்துவமனையில் அனுமதி – கொல்கத்தா!

கொல்கத்தாவிலுள்ள ஜல்பைக்குரி மருத்துவமனையில் தினமும் 40 முதல் 50 குழந்தைகள் வரை உடல்நல குறைவால் அனுமதிக்கப்படுவதாக சுகாதர அதிகாரி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஜல்பைகுரி என்னும் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல வார்டில் கடந்த நான்கு நாட்களாக தினமும் 40 முதல் 50 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த அதிகாரி கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட கூடிய 90 சதவீத குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு கொரோனா … Read more

வாரத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே ஆன்லைனில் விளையாட முடியும்…! சீனா அரசு அதிரடி…!

சீனாவில் 18 வயதிற்குட்பட்டவர்கள் வாரத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே ஆன்லைனில் விளையாட முடியும் என சீன அரசு உத்தரவிட்டுள்ளது.  இன்று உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் ஆண்ட்ராய்டு போன்கள் தவழுகிறது. அந்தவகையில் பெரும்பாலானோரின் பொழுதுபோக்கு பூங்காவாக இருப்பது இணையதளங்கள் தான். தங்களது அதிகமான நேரத்தை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் இணையதளங்களில் தான் செலவிடுகின்றனர். தற்போதைய சூழலில் குழந்தைகள் முதல் ஒரு குறிப்பிட்ட வயது வரை உள்ள இளைஞர்கள் … Read more

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 136 பள்ளி மாணவர்கள் விடுவிப்பு …!

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 136 மாணவர்கள் தற்பொழுது விடுவிக்கப்பட்டுள்ளனர். நைஜீரியா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த மே மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களை பணம் கொடுத்து, மீட்டுக் கொள்ளும் படியாக பயங்கரவாதிகள் தெரிவித்திருந்த நிலையில், பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் இணைந்து ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்க முன்வந்துள்ளனர். ஆனால் அந்ததொகை போதுமானதாக இல்லை என பயங்கரவாதிகள் வாங்க மறுத்துள்ளனர். இதனையடுத்து தற்போது கடத்தப்பட்ட 136 மாணவர்களையும் பயங்கரவாதிகள் விடுவித்து விட்டதாக … Read more

குழந்தைகள் கொரோனா மூன்றாம் அலையில் பாதிக்கப்படுவதற்கு சாத்தியமில்லை – மருத்துவர்!

குழந்தைகள் கொரோனா மூன்றாம் அலையில் பாதிக்கப்பட சாத்தியமில்லை என மருத்துவர் திரேன் குப்தா கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை அக்டோபரில் உச்சம் தொடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்த கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டு வருகிறது. ஆனால், இந்த கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுவதற்கு சாத்தியமில்லை என டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையின் குழந்தைகள் நுரையீரல் நிபுணர் டாக்டர் திரேன் குப்தா … Read more