உ.பி.யில் பலத்த மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 4 சிறுவர்கள்பலி!

கன மழைக்கு மத்தியில் உ.பி.யின் எட்டாவாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 சிறுவர்கள் பலி, 2 பேர் காயம். உத்தரபிரதேசத்தின் எட்டாவாவில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹4 லட்சம் நிவாரணத் தொகை வழங்க மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார், என முதல்வர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது. மேலும் இறந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் உடன்பிறந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

#Breaking:சற்று முன்…உ.பி. 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

உ.பி:6 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது;வாக்களித்தார் அம்மாநில முதல்வர் யோகி. உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில்,இதுவரை 5 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில்,உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கான 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது.உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்போட்டியிடும் கோரக்பூர் தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதன்படி,இந்த தேர்தலானது 57 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது.இந்த தேர்தலில் 676 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில்,2.14 கோடி வாக்காளர்கள் … Read more

உத்தரப்பிரதேசத்தில் டெங்கு பலி எண்ணிக்கை அதிகரிப்பு..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதுவரை 55 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.  நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகளவில் பரவி வரும் நிலையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கிறது.  இந்நிலையில் உத்திரபிரதேசம் மாவட்டம் பிரசோபாத் மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 36 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தை உட்பட 6 பேர் … Read more

400 கோடி செலவில் அயோத்தியில் நவீன பஸ் நிலையம் – உத்தர பிரதேச மந்திரிசபை ஒப்புதல்!

அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு 400 கோடி செலவில் அதிநவீன பஸ் நிலையம் அமைக்க உத்திரப்பிரதேச மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அவர்கள் தலைமையில் மாநில மந்திரிசபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த மந்திரிசபை கூட்டத்தில் அயோத்தி ராமர் கோயில் அருகில் நவீன வசதிகள் கொண்ட பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் குறித்து பேசப்பட்டுள்ளது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அமைச்சரவை அமைச்சர் சித்தார்த் நாத் … Read more

கொரோனா தொற்று குறைந்து மாநிலத்தில் இயல்பு நிலை திரும்புகிறது -உத்தரபிரதேச முதல்வர்!

உத்தர பிரதேசத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்கு உள்ளதாக அம்மாநில முதல்வர் கூறியுள்ளார். மேலும், மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து பல மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. அதுபோல உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவுகள் கடமையாக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து … Read more

பிரதமர் மோடியுடன் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று சந்திப்பு!

டெல்லியில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பிரதமரை சந்திக்கவுள்ளார். முதல்வர் யோகி நண்பகல் 12 மணியளவில் பாஜக தேசிய தலைவரையும் சந்திக்க உள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று அவர் டெல்லி சென்றிருந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியிருந்தார். இதனையடுத்து பிரதமர் மோடி அவர்களது … Read more

“பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி அறை விழும்”- நடிகர் சித்தார்த் ட்வீட் …!

உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கருத்தை குறிப்பிட்டு,பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி அறைவேன் என்று நடிகர் சித்தார்த் ட்வீட் செய்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவலானது அதிகரித்து வருகிறது.இதனால்,பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் இறக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்,தங்கள் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக யாரேனும் பொய்யான தகவல்கள் பரப்பினால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று … Read more

வாரணாசியில் ரூ.614 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி வாரணாசியில் ரூ.614 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்டத்தை தொடக்கி  வைக்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசியில், ரூ.614 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்டங்களை, காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளார்.  இந்நிகழ்வில், உத்திரபிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத் கலந்து கொள்கிறார். மேலும்,  பிரதமர் மோடி தசாஸ்வமேத் காட் மற்றும் கிட்கியா காட் ஆகியவற்றின் மறுவடிவமைப்புக்கும் அடிக்கல் நாட்டவுள்ளார். மேலும், ராம்நகரில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனை மேம்படுத்தல், கழிவுநீர் தொடர்பான பணிகள், பசுக்களின் … Read more

சகோதரிகளை தொட்டால் இனி இறுதிஅஞ்சலி..லவ் ஜிகாத்துக்கு எதிர்த்து சட்டம்-யோகி எச்சரிக்கை

உத்தரப்பிரதேச மாநிலத்தில சகோதரிகளின் வாழ்க்கையில் விளையாடும் கயவர்களுக்கு இறுதி ஊர்வலம் நடத்தப்படும் என்றும் லவ் ஜிகாத்தைத் தடுப்பதற்கும் கடும் சட்டம் கொண்டுவரப்பட உள்ளது என்று  முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.   லக்னோ ஜூனாபூரில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் லவ் ஜிகாத்துக்கு எதிராகவும் கடும் சட்டம் இயற்றப்படும் என்றும் எங்கள் சகோதரிகளின் அடையாளத்தையும், மாண்பையும் குலைக்கின்ற் வகையில் செயல்படுபவர்களுக்கு  இறுதி ஊர்வல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன் என்று தெரிவித்தார். மேலும் … Read more

சகோதரியின் பேச்சை கேள் யோகி- உன் அரசுக்கு அவப்பெயர்- உமாபாரதி காட்டம்

நாட்டையே பதற வைத்த உ.பி ஹத்ராஸில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ஊடகங்களுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் அனுமதியளிக்குமாறு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி எதிர்க்கட்சியினருக்கும் அனுமதியளிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான உமா பாரதி கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் உ.பி முதல்வர் யோகிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:ஒரு மூத்த சகோதரி போல இந்த ஆலோசனையை வழங்குவதாக தனது ட்விட்டர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ள உமா பாரதி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை … Read more