உ.பி.யில் பலத்த மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 4 சிறுவர்கள்பலி!

By

கன மழைக்கு மத்தியில் உ.பி.யின் எட்டாவாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 சிறுவர்கள் பலி, 2 பேர் காயம்.

உத்தரபிரதேசத்தின் எட்டாவாவில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹4 லட்சம் நிவாரணத் தொகை வழங்க மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார், என முதல்வர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது.

மேலும் இறந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் உடன்பிறந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.