ஆட்டோகிராப் படம் வெளியாகி 17 வருடங்கள்- நன்றி தெரிவித்து சேரன் ட்வீட்..!

சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் ஆனதால் இயக்குனர் சேரன் தனது ட்வீட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான ட்வீட் ஒன்றை செய்துள்ளார். தமிழ் சினிமாவில் சிறப்பான கதைகளை படமாக எடுப்பதில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் சேரன். இவர் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆட்டோகிராப். இந்த படத்தில் நடிகை கோபிகா, ஸ்னேகா, மல்லிகா,கனிகா, இளவராசு, போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். ரமணி பரத்வாஜ், சபேஷ்-முரளி ஆகியோர் … Read more

மக்கள் செல்வனுக்கு காத்திருந்து கடைசில பிரபல நடிகையை ஒப்பந்தம் செய்த சேரன்.!

சேரன் அடுத்ததாக சிறிய பட்ஜெட்டில் ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து ஒரு படத்தினை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் குடும்ப ரசிகர்களின் மனதை தனது அழகான படைப்பின் மூலம் கவர்ந்தவர் இயக்குனரும், நடிகருமான சேரன் .இவர் ஆட்டோகிராப் உள்ளிட்ட பல படங்களை இயக்கி நடித்துள்ளார் .குடும்ப உறவுகளின் மதிப்பை தனது படங்களின் மூலம் எடுத்துரைக்கும் இவர் பிக்பாஸ் சீசன்-4ல் கலந்து கொண்டு மேலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதனை தொடர்ந்து திருமணம்,ராஜாவுக்கு செக் உள்ளிட்ட படங்களில் நடித்தார் . … Read more

ஆரியின் வெற்றி ஒவ்வொரு கடின உழைப்பாளிகளுக்கு பெருமை – இயக்குனர் சேரன்!

சமூகப் பொறுப்புள்ள நேர்மையான மனிதனின் வெற்றி ஒவ்வொரு கடின உழைப்பாளிகளுக்கும் பெருமை என இயக்குனர் சேரன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு நேற்று நிறைவடைந்துள்ள நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 4. இந்நிகழ்ச்சியில் நடிகர் ஆரி அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில், இவரது வெற்றியை பலரும் கொண்டாடுவதுடன் இவருக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர். இதனை தொடர்ந்து கடந்த … Read more

பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை மரணம்.! உருக்கத்துடன் பதிவிட்ட இயக்குனர் சேரன்.!

பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் சேரன் உருக்கத்துடன் பதிவை வெளியிட்டு இரங்கலை தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா .இலங்கையை சேர்ந்த இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் அதில் போட்டியாளரான சேரன் அவர்கள் லாஸ்லியாவை மகளாக நினைத்து அரவணைத்ததும்,அவரை லாஸ்லியா சேரப்பா என்று அழைத்ததும் பார்ப்பவர்களுக்கு அழகாக இருந்தது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் லாஸ்லியா மட்டுமின்றி அவரது தந்தையான மரியநேசனும் … Read more

இது மாதிரியான படங்களை தடை செய்ய வேண்டும் – இயக்குனர் சேரன்

மாநில அரசும் இதுபோன்ற படங்களுக்கு தடை விதிக்க வேண்டும். சில தினங்களுக்கு முன்பதாக வெளியான, இரண்டாம் குத்து படத்தின் டீசரும், போஸ்டரும் மிகவும் ஆபாசமான முறையில் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த போஸ்டருக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திரையுலக பிரபலங்களுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற்னர். இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா இந்த படத்தின் போஸ்டர் குறித்து அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து, இயக்குனர் சேரன் அவர்கள், ‘மக்கள் இதுபோன்ற படங்களை நிராகரிக்க வேண்டும் என்றும், இருட்டறையில் … Read more

அருண் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மைல்கல்லாக அமைந்த படம்.! பிரபல இயக்குநரின் டூவிட்.!

செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது என்று தெரிவித்துள்ளார். இவர்களின் இந்த டுவிட் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.  அருண் விஜய், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர். கடந்தாண்டு இவர் நடிப்பில் குற்றம் 23,செக்க சிவந்த வானம், தடம் போன்ற வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார்.சமீபத்தில்வெளியான கார்த்திக் நரேனின் மாபியா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்க … Read more

சேரனின் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் இது தானாம்.!

சேரனின் வாழ்வில் மறக்க முடியாத சம்பவத்தை பற்றி தனது டிவிட்டரில் கூறியுள்ளார்.  ஆட்டோகிராப் என்ற படத்தை இயக்கி நடித்து தேசிய விருது பெற்றவர் சேரன். தன்னுடைய படங்களின் மூலம் பெண் கதாபாத்திரங்களை மென்மையாக காண்பித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர். அதனையடுத்து பட வாய்ப்புகள் வராத நிலையில், தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3இல் கலந்து கொண்டு பிரபலமானார். ஆம் ரசிகர்கள் அனைவராலும் தற்போது சேரப்பா என்று … Read more

இந்த செய்தியை எத்தனை பேர் பார்த்தீர்கள்! இயக்குனர் சேரன் ட்வீட்!

விஜய் மல்லையா உள்ளிட்டோரின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்ட இயக்குனர் சேரன். இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் ஆவார். இவர் பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். இவர் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இந்நிலையில், இவர் சினிமாவில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். … Read more

கடைசி மரியாதையாய் என் வணக்கங்கள் அவருக்கு! நடிகர் இர்பான் கான் மறைவுக்கு இயக்குனர் சேரன் ட்வீட்!

நடிகர் இர்பான்கான் மறைவுக்கு இயக்குனர் சேரன் இரங்கல். நடிகர் இர்பான் கான் பிரபாலாமான பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகராவார். இவர் நேற்று பெருங்குடல் தொற்று காரணமாக மும்பையின் கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து  வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் சேரன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ஹிந்தியில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு … Read more

இந்த வாய்ப்பு எல்லா திரைப்படங்களுக்கும் கிடைக்க வேண்டும் – இயக்குனர் சேரன்

இந்த வாய்ப்பு எல்லா திரைப்படங்களுக்கும் கிடைக்க வேண்டும். மீண்டும் இங்கும் ஒருசாரார் மட்டுமே பயன்பெறுவது  மாற வேண்டும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியா முழுவது கடந்த ஏப்ரல்-14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கை நீட்டித்து மே-3ம் தேதி வரை உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், படப்பிடிப்புகள் மற்றும் வெளியாகவிருந்த திரைப்படங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், … Read more