மிக்ஜாம் புயல் : இன்று மாலைக்குள் முக்கால்வாசி மீட்பு பணிகள் நிறைவுபெரும்.! அமைச்சர் KKSSRR பேட்டி.!

Minister KKSSRR says about Michaung Cyclone Rescue operation

சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கம் சற்று குறைந்து உள்ளது. புயலானது தற்போது சென்னையை விட்டு விலகி ஆந்திர மாநில கடற்கரையை நோக்கி சென்றுவிட்டது.  இன்று முற்பகல் ஆந்திர பிரதேசம் பாபட்லா கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி மிக்ஜாம் புயலானது வடக்கு நோக்கி நகர்ந்து உள்ளது. மிகஜாம் புயல் சென்னையை கடந்து சென்றும், புயலின் தாக்கம் தலைநகர் சென்னையை வெகுவாக பாதித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து உள்ளதாக தகவல்கள் … Read more

மிக்ஜாம் புயல்.! பொது போக்குவரத்து ரத்து… பொது தேர்வுகள் ரத்து… உதவி எண்கள் இதோ…

Michaung Cyclone - Chennai floods

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) சென்னையை புரட்டி போட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பை விட மிக்ஜாம் புயல் பாதிப்பு அதிகம் என கூறப்படுகிறது. அந்த அளவுக்கு சென்னை புறநகர் மட்டுமல்லாது சென்னை மத்திய முக்கிய பகுதிகளிலும் மழைநீர் புகுந்தது. மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்ய அரசு சார்பிலும்,  பல்வேறு தன்னார்வலர்களும், அரசியல் அமைப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர். தற்போது … Read more

‘மிக்ஜாம்’ புயல் -17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்..!

Tngovt

‘மிக்ஜாம்’ புயல் சென்னையில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசை நோக்கி நகர்கிறது. ஆந்திராவின் நெல்லூரில் இருந்து 80 கிலோமீட்டர் தென்கிழக்கில் ‘மிக்ஜாம்’புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வடக்கு திசையில் புயல் நகர்ந்து நாளை முற்பகல் ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டை விட்டு புயல் விலகி சென்ற நிலையிலும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் நள்ளிரவு வரை மழை நீடிக்கும் … Read more

சென்னை மழை பாதிப்பு- இதுவரை 4 பேர் உயிரிழப்பு..!

death

தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று  தற்போது புயலாக வலுவடைந்தது.  இந்த புயலுக்கு ‘மிக்ஜாம்’  என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 100 கி.மீ  தொலைவில் வடகிழக்கில் ‘மிக்ஜாம்’ புயல் மையம் கொண்டுள்ளது. ‘மிக்ஜாம்’ புயல்  மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால், ஆந்திராவில் நாளை முற்பகல் பாப்டலா என்ற இடத்தில் புயல் கரையை … Read more

சென்னை விமான நிலையம் நாளை காலை வரை மூடல்!

Chennai Airport

மிக்ஜாம் எதிரொலியால் சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன்பின், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது. சிறிது காலதாமதமாக புயலுக்கு மிக்ஜாம் புயல் என்று பெயர் சூட்டப்பட்டது. வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த தீவிர புயலின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் விடாமல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை மற்றும் … Read more

சென்னையில் இருந்து 100 கிமீ விலகி சென்றது மிக்ஜாம் புயல்!

cyclone

சென்னையில் இருந்து 100 கிமீ தொலைவில் விலகி சென்றது தீவிர புயலான மிக்ஜாம் புயல் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன்பின், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது. சிறிது காலதாமதமாக புயலுக்கு மிக்ஜாம் புயல் என்று பெயர் சூட்டப்பட்டது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் தமிழக … Read more

மிக்ஜாம் புயலால் மிதக்கும் சென்னை… மாற்று உதவி எண்கள் அறிவிப்பு!

HELP LINE NUMBERS

வங்கக்கடலில் உருவாகியுள்ள தீவிர புயலான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் விடாமல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெரும்பான்மையான இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. புயல் மற்றும் கனமழை காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மிக்ஜாம் புயல்: பாதிப்பு குறித்து கேட்டறிந்தார் மத்திய … Read more

நாளை 4 மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிப்பு!

public holiday

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை நீடிக்கும் நிலையில், பொது விடுமுறையை அறிவித்தது தமிழ்நாடு அரசு. பொது விடுமுறையால் 4 மாவட்டங்களில் நாளை கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலன் கருது பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  குடிநீர், பால், மருத்துவ சேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவை … Read more

மேலும் 3 தேசிய பேரிடர் குழுக்கள் வருகை.. திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்!

red alert

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால், பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ள நிலையில், இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழல் மிக்ஜாம் புயல் தீவிர புயலாக வலுப்பெற்று உள்ளதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்றும் இன்று இரவுக்கு பிறகு படிப்படியாக மழை குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீவிர … Read more

Michuang Cylone Live : அண்ணா பல்கலை தேர்வுகள் ரத்து!

மிக்ஜாம் புயல் காரணமாக நாளை முதல் வரும் சனிக்கிழமை (டிச.09) வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் தீவிர புயலாக வலுவடைந்து, சென்னைக்கு கிழக்கே 90 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. கனமழை சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெய்து வருகிறது. இதனால் சென்னையே வெள்ளக்காடாக மிதக்கிறது. அதே சமயம் மிக்ஜாம் புயல் எதிரொலியால் கனமழை பெய்யும் என்பதால் , சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் … Read more