தண்ணீரில் மூழ்கிய புத்தகங்கள்.! கண்ணீருடன் நாங்கள்… வேதனையில் எழுத்தாளர்.!

Writer S Ramakrishnan affect Michaung Cyclone flood

வங்கக்கடலில் உருவாகி வடதமிழகத்தை குறிப்பாக தலைநகர் சென்னையை மிரட்டி, ஆந்திர கடற்கரையில் கரை ஒதுங்கியது மிக்ஜாம் புயல். இந்த புயல் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் முழுதாக நீங்கவில்லை. இன்னும் பல்வேறு இடங்களில் மீட்பு பணிக்க தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழைநீர் இன்னும் பல்வேறு பகுதிகளில் வடியாமல் இருந்து வருகிறது. சென்னை புறநகர் பகுதியில் மக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு நபர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  குறிப்பாக விற்பனை நிலையங்கள் வைத்துள்ளவர்கள் பெரிய அளவில் … Read more

இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை..! ரயில், விமானம், பேருந்து சேவைகள் மீண்டும் தொடக்கம்.!

After Michaung Cyclone Chennai return back

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை பகுதிகளில் பெய்த கனமழை பொதுமக்கள் தினசரி வாழ்வை வெகுவாக பாதித்துள்ளது. பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி தண்ணீர் திறந்துவிடப்பட்டன. மழைநீர் சாலைகளில் தேங்கியது. இதனால் இதுவரை மழைநீர் தேங்காத இடங்களில் கூட தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. அதனை மீட்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள், மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான இடங்களில், குறிப்பாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரையில் … Read more

சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைப்பு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Formula4 CarRace

டிசம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  ஃபாா்முலா ரேஸிங் சா்க்யூட் இந்தியாவின் முதல் ஸ்ட்ரீட் சா்க்யூட் பந்தயங்களான ‘பாா்முலா-4 இந்தியன் சாம்பியன்ஷிப்’ மற்றும் ‘இந்தியன் ரேசிங் லீக்’ காா் பந்தயங்கள் இம்மாதம் சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. அதன்படி, வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் இந்த பந்தயம் சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ. சுற்றளவு சாலைகளில் இரவுப் … Read more

மீட்பு பணிகள் குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கம்!

shivadas meena

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழை கொட்டி தீர்த்தத்தால் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சில இடங்களில் மழைநீர் வடிந்த நிலையில், பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியாமல் உள்ளது. புயல் சென்னை விட்டு விலகி சென்றதால் மழை சற்று குறைந்துள்ளது. மறுபக்கம் மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சென்று … Read more

நாராயணபுரம் ஏரி கரை உடைந்தது.! சென்னை பள்ளிக்கரணையில் பெருகும் வெள்ளம்.!

Chennai Flood - Pallikaranai

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தன. மேலும் வீதிகளில் தேங்கிய மழைநீரும் பல்வேறு பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். சென்னை முக்கிய பகுதிகளில் மழைநீர் வடிந்து சில … Read more

மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கை – நாளையும் இந்தந்த மாவட்டங்களில் விடுமுறை!

schools holidays

மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் புயல் சென்னையை விட்டு விலகி சென்ற நிலையில், மழையின் தீவிரம் குறைந்து, தற்போது … Read more

கரையை கடக்கும் மிக்ஜாம் புயல்… சூறை காற்றுடன் கொட்டித்தீர்க்கும் கனமழை.!

Michaung Cyclone - andhra pradesh

சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயலானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னையில் இருந்து நகர்ந்து சென்ற மிக்ஜாம் தற்போது தெற்கு ஆந்திர பிரதேசம் பாபட்லா கடற்கரை பகுதியில் கரையை கடந்து வருகிறது. இதன் காரணமாக தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மிக்ஜாம் புயல்… ரூ.5,000 கோடி நிவாரணம்.. வெள்ளம் சீரமைப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்! தமிழக அரசை போல தற்போது ஆந்திர அரசும் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை … Read more

புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல்…உதவிக்கரம் நீட்டிய சூர்யா – கார்த்தி.!

suriya karthi

மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு நடிகர்களும் உடன் பிறந்த சகோதரர்களான  சூர்யா மற்றும் கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து மழைநீர் தேங்கி நிற்கினது. அதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மிச்சாங் புயலால் சென்னை மோசமான நிலையில் உள்ளதால், அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. அனைத்து இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், பெரும்பாலான சாலை போக்குவரத்து … Read more

மிக்ஜாம் புயல்… ரூ.5,000 கோடி நிவாரணம்.. வெள்ளம் சீரமைப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!

mk stalin

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்ட்ரல் அருகே கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து வால்டக்ஸ் சாலை, கொளத்தூர் நிவாரண முகாம்களிலும் முதல்வர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், உணவுகளை வழங்கினார். இதன்பின், சென்னையில் வெள்ளம் சீரமைப்பு பணிக்கு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்தார். சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் … Read more

ஓய்ந்தது மழை… வடியும் தண்ணீர் – மின்சாரம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்!

thangam thenarasu

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் தொடர் கனமழை முதல் அதி கனமழை கொட்டி தீர்த்தது. இதில், குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் விடவிய விடிய வரலாறு காணாத வகையில் மழை பெய்தது. இந்த கனமழையால் சென்னை ஒரு தீவு திடலாக காட்சியளிக்கிறது, பார்க்கும் இடம்மெல்லாம் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக உள்ளது. இந்த சூழலில்  சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கம் சற்று குறைந்து, மழை நின்றுள்ளது. மிக்ஜாம் புயலானது … Read more