புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல்…உதவிக்கரம் நீட்டிய சூர்யா – கார்த்தி.!

புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல்…உதவிக்கரம் நீட்டிய சூர்யா – கார்த்தி.!

suriya karthi

மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு நடிகர்களும் உடன் பிறந்த சகோதரர்களான  சூர்யா மற்றும் கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து மழைநீர் தேங்கி நிற்கினது. அதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மிச்சாங் புயலால் சென்னை மோசமான நிலையில் உள்ளதால், அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

அனைத்து இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், பெரும்பாலான சாலை போக்குவரத்து சேதமடைந்துள்ளது. இதுவரை 5 பேர் உயிரிழந்தாக சொல்லப்படுகிறது.  குறிப்பாக, மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு நடிகர் சூர்யா-கார்த்தி முதல்கட்டமாக ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். அது மட்டும் இல்லாமல், தங்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

2015ல் இருந்ததைவிட நிலைமை மிக மோசம்…கொந்தளித்த நடிகர் விஷால்!

சகோதரர்களான சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் இந்த செயலை பார்த்த ரசிகர்கள் அவர்களை பாராட்டி வருகின்றனர். அவர்கள் இருவரும் உதவி செய்வது இது முதல் முறையல்ல, கடந்த காலங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நன்கொடை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015-ம் ஆண்டு சென்னை மாநகரம் வெள்ளத்தால் பேரழிவைச் சந்தித்தபோது, ​​நடிகர் கார்த்தி 25 லட்சம் ரூபாய் வழங்கினார். அது போல்,  2018 ஆம் ஆண்டு கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்க, சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் டெபாசிட் செய்தனர்.

Join our channel google news Youtube