மிக்ஜாம் புயல் நிவாரணம்: வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும் பணி தொடக்கம்!

Cyclone Michaung

மிக்ஜாம் புயல் நிவாரணம் கோரி விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. மிக்ஜாம் புயல் – கனமழை காரணமாக சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு,திருவள்ளூர் ஆகிய மாவட்ட பகுதிகள் வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டது. கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அளித்தது. அதில் குறிப்பாக ரேஷன் கார்டுதரர்களுக்கு தலா ரூ.6000 நிவாரண உதவித்தொகை வழங்கப்டும் என அறிவிக்கப்பட்டது. ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு தலா 6000 ரூபாய் பெரும்பாலும் … Read more

மணீஷ் சிசோடியா முதல் பொன்முடி வரை… 2023-ல் நடந்த முக்கிய நிகழ்வுகள் ..!

ஜனவரி: இந்திய மலியுத்த சம்மேளன தலைவராக பொறுப்பில் இருந்த பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக பல இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய மல்யுத்த வீரர்கள் தலைமையில், பல மல்யுத்த வீரர்கள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டம் நடத்தினர். பிப்ரவரி : … Read more

2023-இல் நடந்தது என்ன? மறக்க முடியாத ‘டாப் 10’ நிகழ்வுகள்!!

2023 unforgettable events

இந்த ஆண்டு (2023)-இல் நம்மால் மறக்க முடியாத வகையில் பல நிகழ்வுகள் நடந்து இருக்கிறது. அது என்னவென்ற சிறு குறிப்பை பார்க்கலாம். 1. துருக்கி நிலநடுக்கம் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 17 மாகாணங்களில் 11 மாகாணங்களில் 50,783 பேர் இறந்தனர். 297 பேர் காணவில்லை மற்றும் 107,204 பேர் காயமடைந்துள்ளனர். குறைந்தது 15.73 மில்லியன் மக்களும் 4 மில்லியன் கட்டிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 345,000 குடியிருப்புகள் நிலநடுக்கத்தால் அழிந்தது. 2. இந்தியாவை மிஞ்சிய சீனா உலகின் … Read more

சேதமடைந்த கோயில்களை சீரமைக்க ரூ 5 கோடி நிதி! சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் முடிவு!

Sekar Babu

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. அதைப்போல சென்னையை தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் கோவில்கள் மற்றும் வீடுகள் என பல சேதமடைந்தது. அதுமட்டுமன்றி இதில் சில மாவட்டங்களில் வெள்ளத்தால் சில மக்கள் உயிரிழக்கவும் செய்தனர். இதனையடுத்து, மழையால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும், சேதமடைந்த குடிசைக்கு தலா ரூ.10,000, தூத்துக்குடி, திருநெல்வேலியில் மழை வெள்ளம் … Read more

ரூ.6000 நிவாரணம்.! ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் விண்ணப்பம்.!

Chennai flood Relief - Tamilnadu CM MK Stalin

மிக்ஜாம் புயல் புயல் – கனமழையால் சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இன்னும் வெகு சில இடங்களில் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அளித்தது. அதில் குறிப்பாக ரேஷன் கார்டுதரர்களுக்கு தலா ரூ.6000 நிவாரண உதவித்தொகை வழங்கப்டும் என அறிவிக்கப்பட்டது. கனமழை … Read more

முதல்வர் மெத்தனம்.. மக்கள் பாதிப்பு – இபிஎஸ் கடும் குற்றசாட்டு!

edappadi palanisawami

அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படாததே சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு காரணம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட துறைமுகம் பகுதிக்கு உட்பட்ட ராயபுரத்தில் இன்று காலை ஆய்வு மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அப்பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதன்பின் சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மழை, வெள்ளம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு … Read more

வெள்ள நிவாரணத்திலும் பிசினஸ் முக்கியமா? உதவி செய்து சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா!

nayanthara fema 9

தற்போது, மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த அதீத கனமழையால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழைநீர் புகுந்து, புறநகர் முழுக்க வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ள நேரில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அரசு மட்டுமல்லாது, பிரபலங்கள், தன்னார்வலர்களும் களப்பணி ஆற்றி வருகின்றனர். அந்த வகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி பகுதி மக்களுக்காக நடிகை நயன்தாரா தரப்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. ஆனால், அது கடைசியில் சர்ச்சையில் போய் முடியும் என அவர் எண்ணி … Read more

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை.. இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை – முதல்வர் ஸ்டாலின்

mk stalin

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் தெங்கியதால், வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சென்னையின் பல்வேறு பகுதிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், மழைநீர் வடியாத பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் மழைநீர் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்பணியில் மத்திய, மாநில பேரிடர் … Read more

என்னால் முடிந்தது 2 லட்சம்…200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 நிதியுதவி செய்த KPY பாலா.!

KPY Bala

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் சென்னை புறநகர் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும் அரசு மட்டுமல்லாது, பல்வேறு அமைப்பினர் , தன்னார்வலர்களும் களப்பணி ஆற்றி வருகின்றனர். இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்டுள்ள பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் பகுதியில் உள்ள 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணமாக நடிகர்கள் பாலா மற்றும் அமுதவாணன் வழங்கியுள்ளனர். இதுகுறித்து KPY பாலா பேசுகையில், “2015-ல் வெள்ளம் வந்தபோது உதவி செய்ய வேண்டும் என்ற … Read more

அரசுடன் கைகோர்த்து உதவுங்கள்… மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்.!

Actor Vijay

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட  மழை வெள்ளத்தினால் சென்னை புறநகர் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான  நிவாரண உதவிகளை வழங்கவும் அரசு மட்டுமல்லாது, பல்வேறு அமைப்பினர் , தன்னார்வலர்களும் களப்பணி ஆற்றி வருகின்றனர். வெள்ளம் அதிகம் பாதித்த சென்னை புறநகர் பகுதியில் தண்ணீரை வெளியேற்றும் வேலையில் ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை முக்கிய பகுதிகளில் நிலைமை சீரமைக்கப்பட்டு பொது போக்குவரத்துகள் வரை இயக்கப்பட ஆரம்பித்துவிட்டன. ஆனால் புறநகர் மக்கள் இன்னும் வீட்டை … Read more