கரையை கடக்கும் மிக்ஜாம் புயல்… சூறை காற்றுடன் கொட்டித்தீர்க்கும் கனமழை.!

சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயலானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னையில் இருந்து நகர்ந்து சென்ற மிக்ஜாம் தற்போது தெற்கு ஆந்திர பிரதேசம் பாபட்லா கடற்கரை பகுதியில் கரையை கடந்து வருகிறது. இதன் காரணமாக தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

மிக்ஜாம் புயல்… ரூ.5,000 கோடி நிவாரணம்.. வெள்ளம் சீரமைப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!

தமிழக அரசை போல தற்போது ஆந்திர அரசும் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்ட தகவலின்படி ஆந்திர மாநில ஓங்கோல் பகுதி கடற்கைரையில் இருந்து 30கிமீ தொலைவிலும், பாபட்லா கடற்கரையில் இருந்து தெற்கு தென்மேற்கு திசையில் 60கிமீ தொலைவிலும் புயல் கரையை கடந்து வருகிறது.

கடந்த 6 மணிநேரமாக மணிக்கு 11கிமீ வேகத்தில் புயல் கரையை நெருங்கி வருகிறது. 90கிமீ முதல் 110 கிமீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. புயல் கரையை இன்னும் சிறுது நேரத்தில் கடந்துவிடும் என்பதால் தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியில் பலவேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

புயல் கரையை கடப்பதன் காரணமாக தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் பெய்த கனமழை அளவு வெளியாகியுள்ளது. பாபட்லா பகுதியில் 22 செமீ மழையளவும், நெல்லூரில் 22 செமீ மழையளவும், ராப்பூர் பகுதியில் 21 செமீ மழையளவும், ஆத்மகூர் பகுதியில் 19 செமீ மழையளவும் அமலாப்பூர் பகுதியில் 17 செமீ மழையளவு பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.