சென்னையில் இருந்து 100 கிமீ விலகி சென்றது மிக்ஜாம் புயல்!

சென்னையில் இருந்து 100 கிமீ தொலைவில் விலகி சென்றது தீவிர புயலான மிக்ஜாம் புயல் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன்பின், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது. சிறிது காலதாமதமாக புயலுக்கு மிக்ஜாம் புயல் என்று பெயர் சூட்டப்பட்டது.

இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை விடாமல் பெய்து வருகிறது, இதில், குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும், சென்னையில் மழை பாதிப்புகளில் சிக்கி இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மிக்ஜாம் புயலால் மிதக்கும் சென்னை… மாற்று உதவி எண்கள் அறிவிப்பு!

இதனைத்தொடர்ந்து, மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக மாறியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் கனமழை தொடரும் என்றும் இன்று இரவுக்கு பிறகு படிப்படியாக மழை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.  மேலும், தீவிர புயலாக மாறிய மிக்ஜாம் புயல் சென்னைக்கு கிழக்கே 90 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது.

அதுமட்டுமில்லாமல், 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் புயல், மேலும் வலுப்பெற்று வடக்கு திசையில், தெற்கு ஆந்திரா பகுதிக்கு நகரக்கூடும் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இருந்து 100 கிமீ விலகி சென்றது தீவிர மிக்ஜாம் புயல். மணிக்கு 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த மிக்ஜாம் புயல், தற்போது 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஆந்திராவில் நாளை முற்பகல் பாப்டலா என்ற இடத்தில் புயல் கரையை கடக்கும் என கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்