ரமலான் பெருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வுகளா? தேதியை மாற்ற வேண்டும்! அமீர்கான் கோரிக்கை

சென்னை பிப்ரவரி 6: ரமலான் திருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வுகள் வருகிற சூழல் எழுந்திருப்பதை சுட்டிக் காட்டி தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வித்துறை அமைச்சருக்கும், சி.பி.எஸ்.இ இயக்குனருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை ஆலோசகர் அ.அமீர்கான் கோரிக்கை விடுத்துள்ளார். சி.பி.எஸ்.இ க்கு அழகல்ல : இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை ஆலோசகர் அ.அமீர்கான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,உலகம் முழுவதும் ரமலான் பெருநாள் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு தமிழக அரசும், மத்திய அரசும் மே … Read more

ஏப்.1 முதல் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் தொடங்கலாம்- சிபிஎஸ்இ அறிவிப்பு

வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகளை ஏப்ரல் 1-ம் தேதி முதல் துவக்கிக் கொள்ளலாம் என சிபிஎஸ்இ அனுமதி அளித்துள்ளது. சிபிஎஸ்இ 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் பள்ளிகளை தொடங்கலாம் என்றும் மாநில அரசின் அனுமதியோடு, நடப்பு கல்வி ஆண்டில் முன்கூட்டியே பள்ளிகளை திறக்க சிபிஎஸ்இ அனுமதி அளித்துள்ளது. மேலும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிபிஎஸ்இ 9 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகளை நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.  

பொதுத்தேர்வு அட்டவணையால் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வந்த புதிய சிக்கல்… வருத்தத்தில் மாணவர்கள்..!

ஒரு பொறியாளராக விரும்பும் 12 ஆம் வகுப்பு மாணவருக்கான முக்கிய தேர்வுகள், ஜேஇஇ மெயின் தேர்வு மற்றும் பொது தேர்வு. இந்நிலையில், இந்த ஆண்டு இந்த தேர்வுகள் மாணவர்களுக்கு கவலைக்குரியதாக மாறிவிட்டது. காரணம் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு அட்டவணையை கடந்த 2-ஆம் தேதி வெளியிட்டார். இதனால், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு புதிய சிக்கல் வந்துள்ளது. கடந்த டிசம்பரில் 2021 ஜே.இ.இ மெயின் தேர்வுகளின் தேதிகள் வெளியிடப்பட்டது. … Read more

#BREAKING: சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு..!

CBSE 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டது. பின்னர், ஜூன் மாதம் முதல் மத்திய அரசு ஊரடங்கை தளர்த்தி வருகிறது. இதனால், அந்தந்த மாநிலங்களில் உள்ள கொரோனா பாதிப்பை கொண்டு முதலில் பள்ளிகள் திறக்கப்பட்டது. சில மாநிலங்களில் அனைத்து வகுப்புகளும் திறக்கப்பட்டது. இதனிடையே வருகின்ற … Read more

CBSE 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

CBSE 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டது. பின்னர், ஜூன் மாதம் முதல் மத்திய அரசு ஊரடங்கை தளர்த்தி வருகிறது. இதனால், அந்தந்த மாநிலங்களில் உள்ள கொரோனா பாதிப்பை கொண்டு முதலில்  பள்ளிகள் திறக்கப்பட்டது. சில மாநிலங்களில் அனைத்து வகுப்புகளும் திறக்கப்பட்டது.இதனிடையே வருகின்ற மார்ச் … Read more

#BREAKING: CBSE 10, 12 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு ..!

இன்று சிபிஎஸ்இ கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுடன்  மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் காணொலிமூலம் பேசினார். அப்போது, வருகின்ற பிப்ரவரி 2-ஆம் தேதி CBSE 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டது. பின்னர், … Read more

#BREAKING: மே 4 முதல் CBSE 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – அமைச்சர்

சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளுக்கான தேதியை அறிவித்தார் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது, கொரோனா தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் பிரிட்டனில் புதிய வகை கொரோனா பரவி வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனிடையே, சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளுக்கான தேதி இன்று … Read more

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு – நாளை மாலை அறிவிப்பு – ரமேஷ் பொக்ரியால்

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் குறித்து மிக முக்கியமான அறிவிப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், சிபிஎஸ்இ பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்றும் ஆனால் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இரு தினங்களுக்கு முன்பு வரும் டிசம்பர் 31-ம் தேதி நாளை சிபிஎஸ்இ தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் குறித்து … Read more

5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்  குறித்து பயிற்சி – ரமேஷ் பொக்ரியால்

பொதுத்தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்று , மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் ,அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குப் பிறகு தேர்வுத் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் முதலில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இதனால்,பள்ளிகள்திறக்கமுடியாத சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து,தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் ,மாணவர்களின் நலன்கருதி பல பள்ளி நிர்வாகம், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இதனிடையே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை … Read more

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறாது -ரமேஷ் போக்ரியால்..!

கொரோனா மத்தியில் ஏராளமான மாணவர்கள் வரவிருக்கும் சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்து கவலைப்படு தொடங்கிவிட்டனர். இந்நிலையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடர்பான அனைத்து மாணவர்களின் கேள்விகளையும் தெளிவுபடுத்தும் விதமாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால், வருகின்ற பிப்ரவரி வரை எந்த தேர்வுகளும் நடைபெறாது. கொரோனா வைரஸ் நோய் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு மாணவர்கள், ஆசிரியர்களிடமிருந்து பல்வேறு … Read more