நீட் உட்பட எந்தவொரு தேர்வெழுத ஆதார் கட்டாயமில்லை;உச்சநீதிமன்றம்

நீட் தேர்வு எழுதுவதற்கு ஆதார் கட்டாயம் என்கிற மத்திய கல்வி வாரியம் விதித்த உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. வரும் 2018ம் ஆண்டு மாணவர்கள் எழுத போகும் நீட் தேர்விற்கு ஆதார் எண் கட்டாயம் அளிக்கப்படவேண்டும் என்றும், ஆதார் அட்டையை அடையாள அட்டையாக காட்டவேண்டும் என்றும் மத்திய அரசின் உயர் கல்வி துறை மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. மேலும் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இவ்வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், … Read more

நீட் தேர்வில் ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியில் வினாக்கள் கேட்கப்படும் என சி.பி.எஸ்.இ அறிவிப்பு…!!

நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும்.அதேபோல் ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியில் நீட் தேர்வு வினாத்தாள் கொடுக்கப்படும்.நீட் தேர்வு வினாத்தாளில் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் 180 கேள்விகள் மட்டுமே இடம்பெறும் என உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ தகவல் தெரிவித்துள்ளது. நடப்பு 2018 ஆம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தான் நடத்தப்படும் எனவும் மாநில பாடத்திட்டம் சேர்க்கப்படவில்லை என சிபிஎஸ்இ கடந்த 22ஆம் தேதிகளில் திட்டவட்டமாக அறிவிப்பு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு: நாடு முழுவதும் ஒரே கேள்வித்தாள் நீதிமன்றத்தில் எழுதிகொடுத்த சிபிஎஸ்இ…!

அடுத்தாண்டு முதல் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே கேள்வித்தாள் வழங்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான கேள்வி தாள்களை வழங்கியதோடு ,மட்டுமில்லாது தேர்வு அறைக்கு செல்ல உடை,அணிகலன் என பல கட்டுபாடுகளை விதித்தது சர்ச்சைக்குரிய செயலாகவும் இருந்தது. மேலும் இது அடித்தட்டு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் என பல எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக முற்போக்கு அமைப்புகள் போராட்டம் நடத்தின.பல வழிகளில் … Read more