ரயில் முன் தள்ளி மாணவி கொல்லப்பட்ட வழக்கு – விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!

ரயில் முன் தள்ளி மாணவி சத்யா கொல்லப்பட்ட வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி. சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யா ஆகிய இருவரும் நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த சதீஷ், எதிரில் வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை தள்ளிவிட்டுள்ளார். ரயிலில் சிக்கி மாணவி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த … Read more

#BREAKING: கோடநாடு வழக்கு – விசாரணை அதிகாரி நியமனம்!

கோடநாடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம். கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொள்ளை, கொலை சம்பவம் நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உட்பட 11 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். கோடநாடு கொலை கொள்ளைச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே சேலத்தில் நடந்த விபத்தில் மர்மமான முறையில் … Read more

#BREAKING: கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க உத்தரவு!

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணைக்கு அவரது பெற்றோர் ஒத்துழைக்கவில்லை என சிபிசிஐடி தகவல்.  கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கு தொடர்பாக அவரது தாய் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி பதில் அளித்துள்ளது. மரபணு சோதனைக்கு மாதிரிகளை தர மாணவியின் பெற்றோர் மறுக்கிறார் என்றும் சிபிசிஐடி குற்றசாட்டியுள்ளது. இதையடுத்து, மாணவி பயன்படுத்திய மொபைல் போனை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என பெற்றோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று, மாணவி … Read more

#BREAKING: அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி மீண்டும் விசாரணை!

அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூலை 11-ல் அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக ஏற்கனவே சிபிசிஐடி விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் … Read more

அதிமுக அலுவலக மேலாளரிடம் சிபிசிஐடி விசாரணை!

அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் சிபிசிசிடி போலீசார் விசாரணை.  அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக மேலாளர் மகாலிங்கத்திடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜூலை 11-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வன்முறை தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி மகாலிங்கம் விளக்கமளித்து வருகிறார். கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டதாக கூறி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளை … Read more

கனிம வளத்துறை முன்னாள் இணை இயக்குனர் வீட்டில் சிபிசிஐடி சோதனை.! முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு.?

தர்மபுரியில் இன்று கனிமவளத்துறை முன்னாள் இணைய இயக்குனர் சுரேஷ் அவர்களது வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.  தர்மபுரியில் இன்று சிபிசிஐடி போலீசார் , கனிமவளத்துறை முன்னாள் இணைய இயக்குனர் சுரேஷ் என்பவரது வீட்டில் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இன்று காலை ஆரம்பித்த இந்த சோதனை கடந்த ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நடைபெற்று வருகிறது. கனிமவளத்துறை முன்னாள் இணைய இயக்குனர் சுரேஷ் , முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. … Read more

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்; யாரேனும் புலன் விசாரணை நடத்தினால் நடவடிக்கை – சிபிசிஐடி

யாரேனும் புலன் விசாரணையில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி எச்சரிக்கை. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்த மாணவி ஒருவர், கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். இதன்பின் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் பள்ளி வாகனங்கள், பள்ளியில் இருந்த சான்றிதழ்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், வீடியோ ஆதாரங்களை கொண்டும், சிசிடிவி காட்சிகளைக் … Read more

#BREAKING: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் – மேலும் இருவர் கைது!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக மேலும் 2 பேரை கைது செய்தது சிபிசிஐடி. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக மேலும் 2 பேர் சிபிசிஐடி போலீசால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சங்கராபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல் விதிக்கப்பட்டது. 3 … Read more

#BREAKING: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் – 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல்!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல். கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 3 பள்ளி நிர்வாகிகள், 2 ஆசிரியைகளை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் மாவட்டம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. … Read more

#BREAKING: தீவிரமடையும் விசாரணை..கள்ளக்குறிச்சி பள்ளியில் 2வது நாளாக சிபிசிஐடி ஆய்வு!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 2வது நாளாக சிபிசிஐடி விசாரணை. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் அமைந்துள் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மனைவி ஸ்ரீமதி கடந்த 13-ஆம் தேதி மடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் சார்பில், மாணவியின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பெற்றோர்கள் மாணவி தற்கொலை செய்யவில்லை, அவரது மரணத்தில் மர்ம இருப்பதாக கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த சமயத்தில் … Read more