ரயில் முன் தள்ளி மாணவி கொல்லப்பட்ட வழக்கு – விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!

ரயில் முன் தள்ளி மாணவி சத்யா கொல்லப்பட்ட வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி.

சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யா ஆகிய இருவரும் நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த சதீஷ், எதிரில் வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை தள்ளிவிட்டுள்ளார்.

ரயிலில் சிக்கி மாணவி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படை போலீசார் அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை கைது செய்யப்பட்டார். இதன்பின் கைது செய்யப்பட்ட சதீஷை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், சென்னை பரங்கிமலையில், ரயில் முன் தள்ளி மாணவி சத்யா கொல்லப்பட்ட வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி. பரங்கிமலை ரயில் நிலையம் மற்றும் ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment