பாதாம் தெரியும்.. ஆதாம் தெரியாது.! கமல்ஹாசனை மீண்டும் மிரள வைத்த ஜி.பி.முத்து.!

பிக் பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி இன்னும் ஒருவாரம் கூட ஆகாத நிலையில், பல சண்டைகள் வர தொடங்கிவிட்டது என்றே கூறலாம். இன்று சனிக்கிழமை என்பதால் இன்று கமல்ஹாசன் வருகை தனது ஹவுஸ்மேட்ஸ்டுடன் உரையாடுவார். தற்போது இந்த நாளுக்கான ப்ரோமோ விடியோவும் வெளியாகியுள்ளது.

ப்ரோமோவில் கமல்ஹாசன் முதலில் சாந்தியிடம் ” வரும்போது சொல்லி அனுப்புனாங்க கொஞ்சம் ஏமாந்தீங்க என்றால் உப்புமா கொடுத்து அனுப்பிவிடுவார்கள் என்று” உடனே அங்கிருந்த ஹவுஸ்மேட்ஸ் சிரிக்கிறார்கள். பிறகு மகேஷ்வரியிடம் கேஷ்வரியுடன் அடிக்கடி முட்டி கொள்கிறீர்கள் போல.. என்று கேட்க மகேஷ்வரி சிரிக்கிறார் பிறகு கண்ணாடியில் முட்டி கொள்கிறீர்கள் போல என்று கேட்டு மாற்றுகிறார்.

அடுத்ததாக கமல்ஹாசன் ஜிபி முத்துவிடம் நீங்கள் எழுந்து நிள்ளுங்கள் என்று கூற உடனே எழுந்து கொள்கிறார். உங்களுக்காக ஒரு விஷயம் இருக்கு என கூறிவிட்டு அவருடைய கையில் ஒரு பேட்டியை கொடுத்து அதனை திறக்க சொல்கிறார். அதில் பாதம் பருப்பு இருக்கு என ஜிபி முத்து கூற, அதற்கு கமல் பாதம் தெரியுது ஆதாம் தெரியவில்லையா..? என்று கேட்கிறார். உடனே ஜிபி முது ஆதாமா.. அது எங்க இருக்கு என்று கேட்கிறார் ப்ரோமோவும் நிறைவடைகிறது.

இதைப்போல பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளில் கமல் ஜிபி முத்துவிடம் ஆதாம் என்று கூறியிருந்தார். அப்போதும் ஜிபி முத்து இதைப்போன்று தான் ஆதாமா ..? அது எங்க இருக்கு என்று கேட்டிருந்தார். அதற்கு கமல்ஹாசனும் மிரண்டு போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment