#BREAKING: சற்று நேரத்தில் ஆளுநரை சந்திகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்கு சந்திக்கிறார். ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்க கிண்டி ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். கொரோனா நிவாரண நிதிக்கு ஆளுநர் ஒரு கோடி வழங்க உள்ளதாகவும் , ஆளுநர் வழங்கும் நிதியை பெறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்கிறார் என தகவல் வெளியாகிஉள்ளது. அதே நேரத்தில்கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஆளுநரை சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் … Read more

இன்று காலை 10 மணியளவில் ஆளுநரை சந்திக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் ஆளுநரை சந்தித்து தமிழகத்தில் ஆட்சியமைக்கும் உரிமையைப் பெறவுள்ளார்.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நடைபெற்றது.இதற்கான வாக்குஎண்ணும் பணியானது மே 2 ஆம் தேதி நடந்தது.இதில்,திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது.எனவே,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்பது உறுதியானது. ஆனால் இந்தப் பதவியேற்புக்கு முன்னர்,கூட்டம் கூட்டி திமுக சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஸ்டாலின் பெற … Read more

ஆளுநருடன் மாலை தலைமை செயலாளர் சந்திப்பு..!

தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார்.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ராஜீவ் ரஞ்சன் ஆளுநரிடம் விளக்குகிறார். மேலும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி ஆகியோரும் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்.கொரோனா அதிகரித்து வருவது மற்றும் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் குறித்தும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் விளக்கவுள்ளனர்.  

மகாத்மா காந்தியின் 74-ஆவது நினைவு தினம்..! ஆளுநர் மற்றும் முதல்வர் மலர்தூவி மரியாதை!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். இன்று தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் போன்ற அரசியல் பிரபலங்களும் காந்தியின் … Read more

#BREAKING: நாளை ஆளுநரை சந்திக்கும் ஸ்டாலின்..?

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நாளை காலை 10 மணிக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சந்திக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மு.க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நாளை ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து பேசவுள்ளனர். அப்போது தமிழக அரசின் சில ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஸ்டாலின் புகார் மனு அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா குறித்தா? அதிமுக குழப்பம் குறித்தா? இன்று ஆளுநரை சந்திக்கும் இபிஎஸ்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிச்சாமி இன்று சந்திக்கிறார்.கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்கிறார். தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையானது கடந்த மார்ச்.,24ந் தேதி முதல் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு செப்.30-ம் தேதியோடு 8 கட்ட ஊரடங்குகள் முடிவடைந்தது. அக்.1ந்தேதி 9ம் கட்டமாக சில தளர்வுகளுடன் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டது. இதன்படி கடந்த செப்.,1 தேதியுடன் இ-பாஸ் முறையானது ரத்து செய்யப்பட்டது, பேருந்து போக்குவரத்துக்கும் அனுமதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு  … Read more

#BREAKING : கொரோனாவில் இருந்து குணமடைந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

கொரோனாவால்  பாதிக்கப்பட்டிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குணமடைந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன் ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் காரணமாக கடந்த ஜூலை 28-ஆம் தேதி முதல் தமிழக  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனிமைப்படுத்திக்கொண்டார். இதனிடையே ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.அந்த சோதனையில்  ஆளுநருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது என … Read more

ஆகஸ்ட் 15-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து.!

நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு தனது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவரின் உடல் நிலை குறித்து தனியார் மருத்துவமனையின் மருத்துவ குழு கண்காணித்து வருகிறது. இந்நிலையில், ஆளுநரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், சுதந்திர தினத்தன்று  ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகள்  அனைத்தும் ரத்து எனஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. சுதந்திர தினம், குடியரசு தினம் அன்று மாலை முதல்வர், நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களை உபசரிக்கும் நிகழ்வு நடைபெறும். தற்போது, ஆளுநருக்கு ஏற்பட்ட கொரோனா … Read more

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் பழனிசாமி சந்திப்பதாக கூறிய நிலையில், முதல்வர் தற்பொழுது ஆளுநரை சந்தித்து பேசுகிறார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். மேலும், அவருடன் மூத்த அதிகாரிகள் சிலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த சந்திப்பில் தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதுகுறித்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து முதல்வர் விளக்கமளிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து … Read more

#Breaking: தமிழக ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் முதல்வர்!

இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதல்வர் பழனிசாமி சந்திக்கவுள்ளார். தமிழக ஆளுநரான பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5.00 மணிக்கு ஆளுநர் மாளிகையில் முதல்வர் பழனிசாமி சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பில் முதல்வர், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து 4-ஆம் முறையாக ஆளுநரை முதல்வர் பழனிச்சாமி சந்திப்பது குறிப்பிடத்தக்கது.