ஆளுநருடன் மாலை தலைமை செயலாளர் சந்திப்பு..!

தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ராஜீவ் ரஞ்சன் ஆளுநரிடம் விளக்குகிறார். மேலும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி ஆகியோரும் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்.கொரோனா அதிகரித்து வருவது மற்றும் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் குறித்தும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் விளக்கவுள்ளனர்.

 

author avatar
murugan