எச்சரிக்கை : QR குறியீட்டை பயன்படுத்தி பணபரிவர்த்தனை செய்பவரா நீங்கள் …?

கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டாம் என்று எஸ்பிஐ  வங்கி ட்வீட் செய்துள்ளது.  

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவலாக பரவி வருகின்ற நிலையில், ஆன்லைன் பரிவர்த்தனைகள் தற்போது அதிகரித்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி சிலர் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம், அதாவது கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், பண மோசடிகள் நடப்பது குறித்து வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதை தவிர்த்தாலே ஆன்லைன் மோசடிகளுக்கு ஆளாகாமல் அதிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். நீங்கள் கியூ ஆர் கோட் குறியீட்டை ஸ்கேன் செய்வதால் உங்களுக்கு பணம் கிடைக்காது. உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி மட்டுமே கிடைக்கும்.

எனவே முடிந்தவரை மற்றவர்கள் உங்களுக்கு பகிர்ந்துகொள்ளும் கியூஆர் கோட்டை ஸ்கேன் செய்யாமல் இருங்கள். இது குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் என எஸ்பிஐ  வங்கி ட்வீட் செய்துள்ளது.  இதுகுறித்து எஸ்பிஐ வங்கி ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.