புதிய ஹெச்1பி விசா விதிமுறைகளால் யாருக்கு பாதிப்பு..?

  டொனால்டு டிரம்ப் அரசின் புதிய ஹெச்1பி விசா கட்டுப்பாடுகளின் பாதிப்பு, இந்திய ஐடி நிறுவனங்களையும், ஊழியர்களையும் பயமுறுத்தி வந்த நிலையில், இன்போசிஸ் முன்னாள் உயர் அதிகாரியான மோகன்தாஸ் பாய்க் ஐடி ஊழியர்களுக்குச் சாதகமான ஒரு பதிலை  கூறியுள்ளார். அமெரிக்க அரசு அறிவித்துள்ள புதிய ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிகளவிலான பாதிப்பை உருவாக்கும் எனக் கருதப்பட்டு வந்தது.  ஆனால் விதிகளை மீறிச் செயல்படும் சில நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பாக அமையும் எனக் கோகன்தாஸ் … Read more

அமெரிக்க விமானந் தாங்கிக் கப்பல் வியட்நாமில்?வலுவைடைகிறதா இருதரப்பு உறவு….

வியட்நாமுக்கு  அமெரிக்க விமானந் தாங்கிக் கப்பலான யு.எஸ்.எஸ்  கார்ல் வின்சன் (USS Carl Vinson) வியட்நாமுக்கு வந்துள்ளது.அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று வியட்நாம் போருக்குப் பின் முதன் முறையாக  வந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 1 லட்சத்து 3 ஆயிரம் டன் எடையுள்ள  யு.எஸ்.எஸ் கார்ல் வின்சன் கப்பலுடன் வேறு இரு கப்பல்களும் 5 நாள் பயணமாக வியட்நாமின் டனாங் துறைமுகத்துக்கு வந்துள்ளன. அமெரிக்கா – வியட்நாம் இடையே வளர்ந்து வரும் இருதரப்பு உறவுகளின் அடையாளமாக  யு.எஸ்.எஸ் கார்ல் … Read more

அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழ்ச்சி ….சீன அதிபர் ஜீ ஜின்பிங் சக்தி வாய்ந்த தலைவர்….

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , சீன அதிபரின் பதவிக் காலம் காலவரையின்றி அதிகரிக்கப்படுவதற்கான நடவடிக்கையை சுட்டிக்காட்டி,  ஜீ ஜின்பிங்கை பாராட்டியுள்ளார். தற்போது சீனாவின் அதிபராக உள்ள ஜீ ஜின்பிங்கின் பதவிக்காலம் 2022ஆம் ஆண்டுடன் நிறைவு பெறும் நிலையில், நிரந்தர அதிபராக மாறுவதற்கான நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார். ஜீ ஜின்பிங்கை மிகச்சிறந்த பண்புள்ள மனிதர் என்றும், சீனாவின் சக்தி வாய்ந்த தலைவர் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழ்ந்துள்ளார். ஜீ ஜின்பிங்கை வாழ்நாள் அதிபர் என்று … Read more

அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!அமெரிக்காவில் கார்களுக்கு இனி வரி ?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் கார்களுக்கான வரி விதிக்கப் போவதாக  எச்சரித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கைகோர்த்துக் கொண்டு வர்த்தகத்தில் அமெரிக்காவை வீழ்த்த துரோகம் இழைப்பதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார். ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க கம்பெனிகளுக்கு வரி அதிகமாக வசூலிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய டிரம்ப், இதை மேலும் அதிகரித்தால், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் கார்களுக்கு வரி விதிக்கும் நடைமுறையைக் கொண்டு வரப் போவதாக எச்சரித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

வெளியானது வியாழன் கிரகத்தின் புதிய புகைப்படம்!

வியாழன் கிரகத்தின் புதிய படமொன்றை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா,  தற்போது வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ‘ஜூனோ’ என்ற விண்கலத்தை, வியாழன் கிரகத்தை ஆய்வு செய்வதற்கு  அனுப்பியது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த காமிரா, வியாழன் கிரகத்தில் ஏற்படும் பருவ நிலை மாற்றம் மற்றும் தட்பவெப்ப நிலைகளை படமாக எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. அந்த வரிசையில் எடுக்கப்பட்ட புதிய புகைப்படத்தை, நாசா தற்போது வெளியிட்டுள்ளது. கருநீல வண்ணத்தின்  அழகான அந்தப் புகைப்படம், பிப்ரவரி … Read more

அமெரிக்காவில் பனிப்புயல் !!!

அமெரிக்கா: பனிப்புயலில் சிக்கி 5 பேர் பலி அமெரிக்காவில் உள்ள கிழக்கு மாகாணங்களில் பனிப்புயல் தாக்கத்தினால் 5ற்கும் மேற்ப்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் கிழக்கு கடலோர மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கடும் பனிபுயல் வீசி வருகிறது. இந்நிலையில், கிழக்கு கடலோர மாகாணங்களான நியூஜெர்சி, நியூயார்க், மசாசூசெட்ஸ் உள்ளிட்ட நகரங்களில் நேற்று பனிப்புயலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்த பனிப்புயல் மணிக்கு 100 கிமீ வேகத்தில் வீசியதால், பனியின் தாக்கம் அதிகரித்ததோடு, நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள், மரங்கள் மற்றும் வீடுகளின் … Read more

பேரிடர்களை துல்லியமாக அறிவதற்கான கோஸ் எஸ் (GOES S) என்ற செயற்கைகோளை விண்ணில் ஏவியது நாசா!

நாசா  வானிலை நிலவரங்களை முன்கூட்டியே அறிவதற்கான மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. கோஸ் எஸ் (GOES S) என்ற அந்த செயற்கைகோள் அட்லஸ் 5 ராக்கெட் மூலம் கேப் கேனவரலில் (cape canaveral) உள்ள தளத்தில் இருந்து ஏவப்பட்டது. இந்திய மதிப்பின்படி சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் மேற்குப் பிராந்தியத்தில் ஏற்படும் புயல், காட்டுத் தீ, வெள்ளம், மண் சரிவு ஆகிய பேரிடர்களை துல்லியமாக அறிவதற்கு இந்த … Read more

எச்1 பி விசாதாரர்கள் வாழ்க்கைத் துணைக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு?

எச்1பி விசா வைத்திருப்போரின் வாழ்க்கைத் துணையும் வேலைவாய்ப்பு கோருவதை தடுக்கும் முடிவை அமெரிக்காவில் குடியேற்றத்துறை ஒத்திவைத்துள்ளது. எச்1 பி விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றும் தொழில் நுட்ப பணியாளர்கள், தங்கள் கணவன் அல்லது மனைவிக்கும் வேலை வாய்ப்பு தருமாறு கோரலாம். இந்நிலையில் இந்த விதிகளில் மாற்றம் கொண்டு வர அமெரிக்க குடியேற்றத்துறை முடிவு செய்தது. இதற்கான வரைவு மசோதா கடந்த மாதமே அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய சட்டவிதிகள் இந்தாண்டு … Read more

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்புக்கு எதிர்ப்பு!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கு வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பு ஏற்க முடியாதது என  விமர்சித்துள்ளார். அமெரிக்காவுக்கு உருக்கு மற்றும் அலுமினிய ஏற்றுமதியில் கனடா முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், நாட்டின் உருக்கு மற்றும் அலுமினிய தொழில்துறையை பாதுகாப்பதற்காக, இறக்குமதி கட்டுப்படுத்தப்படும் எனக் கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இறக்குமதி செய்யப்படும் உருக்குக்கு 25 சதவீதமும், அலுமினியத்துக்கு 10 சதவீத வரியும் விதிக்கப்படும் எனக் கூறினார். இதற்கு … Read more

ட்ரம்ப் அதிரடி : வரி உயர்வு !!!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,  உள்நாட்டு தொழிலை காப்பாற்றும் நோக்கில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினயத்திற்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை கடுமையாக உயர்த்தியுள்ளார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதலே உள்நாட்டு தொழிலாளர்களை பாதுக்காக்கவும், உள்நாட்டு தொழில்களை காக்கவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக எச் -1 பி விசா நடைமுறைகளை கடுமையாக்கினார். இதை தொடர்ந்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமனியத்தை பாதுகாக்கவும், இறக்குமதியை தடுக்கும் பொருட்டும், … Read more