அரசு ஊழியர்கள் சென்ற பேருந்து மீது குண்டுவெடிப்பு! 7 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் சென்ற பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல்..  ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் ஹைரதன் ஆயில் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதாவது, ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தின் தலைநகரான மசார்-இ-ஷெரீப் நகரின் சாலையோரம் உள்ள ஒரு வண்டிக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அப்போது, ஹைரதன் ஆயில் நிறுவன அரசு ஊழியர்களை ஏற்றி கொண்டு பேருந்து அப்பகுதியை கடந்தபோது குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதில், பேருந்து கடுமையாக சேதமடைந்தது. … Read more

காபூல் கல்வி நிறுவனத்தில் தற்கொலைப்படை தாக்குதல்.. 19 பேர் உயிரிழப்பு!! 27 பேர் காயம்!

காபூல் கல்வி நிறுவனத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் உயிரிழந்த நிலையில், 27 பேர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் 27 பேர் காயமடைந்துள்ளனர் என்று காபூல் காவல்துறை செய்தித் தொடர்பாளர்களை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஊடக நிறுவனமான டோலோ நியூஸ் தனது ட்விட்டரில், காஜ் கல்வி மையத்தில் நடந்த தாக்குதலில் குறைந்தது … Read more

ரஷ்ய தூதரகம் அருகே பெரும் குண்டுவெடிப்பு.! 2 ரஷ்யர்கள் உட்பட 20 பேர் உயிரிழப்பு.!

ஆப்கான் தலைநகர் காபூலில் இன்று காலை குண்டுவெடிப்பு நடந்துள்ளது. அதில் இரண்டு ரஷ்யர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பானது காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் முன்னே நிகழ்ந்துள்ளது. திங்கள் கிழமை காலை என்பதால் அங்கு கணிசமான ஆட்கள் இருந்துள்ளனர். ரஷ்யா தூதரகத்தில் இருந்த 2 ரஷ்யர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளானர். அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவன் இந்த தாக்குதலை நடாத்தியுள்ளான் என முதற்கட்ட … Read more

ஆப்கானிஸ்தான்; காபூலில் நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு..18 பேர் காயம்!

காபூலில் மசூதிக்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழப்பு. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷியா பிரிவு இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு நடத்தும் மசூதிக்கு வெளியே பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 18 படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மசூதிக்கு அருகே ஒரு வண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. … Read more

#Breaking : டி20 போட்டியின் போது கிரிக்கெட் மைதானத்தில் தற்கொலைப்படை தாக்குதல்.!

ஆப்கானிஸ்தானில் டி20 தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் போது தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது.  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஷ்பஜீசா கிரிக்கெட் லீக் எனும் உள்ளூர் டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்றது. அப்போது,  பேண்ட்-இ-அமிர் டிராகன்ஸ் மற்றும் பாமிர் சல்மி எனும் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. அந்த சமயம், திடீரென தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது . திடீரென மைதானத்தில் குண்டு வெடித்தது உலக நாடுகளில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த போட்டியின் போது, … Read more

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,100 ஆக அதிகரிப்பு..!

ஆப்கானிஸ்தானின் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 1,100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தான் பாக்டிகா மாகாணத்தில் கடந்த புதன் கிழமை அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்டிலிருந்து 44 கி.மீ தொலைவில் 51 கி.மீ ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 255 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தானின் கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் ஏற்பட்ட … Read more

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்!?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும், அவர்கள் ஆப்கானிஸ்தானில் கொலையாளி ஒருவரிடம் உதவி கோரியுள்ளதாகவும் பயங்கரவாத தடுப்பு துறையின் கைபர் பக்துன்க்வா பிரிவை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாதுகாப்புக்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, பாகிஸ்தானில் பொருளாதார … Read more

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; 255 பேர் உயிரிழப்பு.. 500 பேர் காயம்!

ஆப்கானிஸ்தானின் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 255 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல். கிழக்கு ஆப்கானிஸ்தான் பாக்டிகா மாகாணத்தில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்டிலிருந்து 44 கி.மீ தொலைவில் 51 கி.மீ ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 155 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்பட்டது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் ஏற்பட்ட … Read more

#BREAKING: ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 130 பேர் பலி!

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 130 பேர் உயிரிழப்பு என தகவல். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 130 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அதிகாலை ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது. அதன்படி, தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்டிலிருந்து 44 கி.மீ தொலைவில் 51 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் … Read more

#BREAKING: ஆப்கானிஸ்தான் குருத்வாராவில் குண்டுவெடிப்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் குருத்வாராவில் ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலி. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கர்தே பர்வான் குருத்வாராவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. குருத்வாரா வாயிலுக்கு வெளியே குண்டு வெடித்ததில் குறைந்தது இரண்டு ஆப்கானியர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குருத்வாராவின் பாதுகாப்பு காவலாளியான அகமதுவை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காபூலில் உள்ள குருத்வாரா மீது தாக்குதல் … Read more