ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; 255 பேர் உயிரிழப்பு.. 500 பேர் காயம்!

ஆப்கானிஸ்தானின் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 255 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்.

கிழக்கு ஆப்கானிஸ்தான் பாக்டிகா மாகாணத்தில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்டிலிருந்து 44 கி.மீ தொலைவில் 51 கி.மீ ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 155 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்பட்டது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 255 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் எனவும் தகவல் கூறப்படுகிறது.

கிழக்கு ஆப்கானிஸ்தானில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பாக்டிகா மாகாணத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கத்தால் அப்பகுதியில் வீடுகள் சேதமடைந்து உள்ள நிலையில், பக்திகாவில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்தன. முதற்கட்ட தகவல்களின்படி, பாக்டிகா, கயான் மாவட்டத்தில் 100 பேர் இறந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் துபாய் கிராமத்தில், கோஸ்ட் மாகாணத்தின் ஸ்பெரா மாவட்டத்தில் 20 பேர் சடலமாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.

இதற்கிடையில், பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள சுமார் 119 மில்லியன் மக்களால் சுமார் 500 கிமீ தொலைவில் இந்த அதிர்வு உணரப்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில்,  ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பல கிராமங்களில் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here