பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்!?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும், அவர்கள் ஆப்கானிஸ்தானில் கொலையாளி ஒருவரிடம் உதவி கோரியுள்ளதாகவும் பயங்கரவாத தடுப்பு துறையின் கைபர் பக்துன்க்வா பிரிவை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாதுகாப்புக்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ள நிலையில், இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்தனர். இதற்கான தீர்மானங்களும் கொண்டுவரப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 69 வயதான இம்ரான் கான் கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் பதிவில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ஷெபாஸ் ஷெரீப் அந்நாட்டின் புகிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தான் நாட்டில் கடுமையான அரசியல் நெருக்கடி மற்றும் பொருளாதாரத்தை அப்போதைய பிரதமர் இம்ரான் கான் முறையாக மேம்படுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here