அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!விளையாட்டு வீரர்கள் தங்கள் சம்பாத்தியத்தில் மூன்றில் ஒரு பங்கு தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும்!

விளையாட்டு வீரர்கள் தங்கள் சம்பாத்தியத்தில் மூன்றில் ஒரு பங்கு தொகையை ஹரியானாவில் மாநிலத்தின் விளையாட்டு முன்னேற்றத்துக்காக வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 30ஆம் தேதியிட்ட அரசாணையில், விளையாட்டு வீரர்கள் தங்கள் தொழிலிலும், வணிகரீதியான ஒப்பந்தங்கள் மூலமும் கிடைக்கும் தொகையில் மூன்றில் ஒரு பங்கு நிதியை மாநில விளையாட்டு கவுன்சிலில் செலுத்த வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. ஊதியமற்ற அசாதாரண விடுப்பில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் தங்களுக்கு கிடைக்கும் தொகையில் மூன்றில் ஒரு பங்கையும், ஊதியத்துடன் … Read more

உலகின் எந்த நீதிமன்றத்திலும் தமிழக அரசின் அரசாணை செல்லும்!அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார் ,தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் அரசாணை, உலகின் எந்த நீதிமன்றத்திலும் செல்லும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தூத்துக்குடியில் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளதாகவும், விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிட்டார். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதற்காக தான் அதிமுக அரசு பாடுபட்டது எனவும், இந்த ஆலை செயல்பட முதல் காரணம் திமுக தான் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் குறை கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் நீதிமன்றம் … Read more

சீனா-இந்தியா உறவை மேம்படுத்த சாதகமான சூழல் நிலவுகிறது!பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்,இந்தியா-சீனா உறவை மேம்படுத்த சாதகமான சூழல் நிலவி வருவதாக  தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில், சீனாவின் புவி அரசியல், வணிகம் மற்றும் சமூக மாற்றம் தொடர்பான சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்று சிறப்புரையாற்றிய அவர், நாளை ஷாங்காயில் நடைபெறும் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பதைச் சுட்டிக்காட்டினார். பிரதமர் மோடி சீனா அதிபர் ஜி ஜின்பிங்,  ரஷ்ய அதிபர் புதினிடமும்,  சுமூகமான உறவை மேற்கொண்டுள்ளதன் மூலம் எதிர்காலத்தில் இந்தியா- சீனா உறவு மேம்படும் என நம்பிக்கை … Read more

பள்ளிக் கல்வித்துறை-சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்திய அளவிலான தகுதித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வகையிலும் , மாணவர்களின் பல்வேறு திறன்களை மேம்படுத்தவும்,கல்வி முறையை மேம்படுத்த தொழில்நுட்ப உதவிகளைப் பெறும் வகையில் சென்னை ஐ.ஐ.டி.யுடன் பள்ளிக் கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் சென்னை ஐ.ஐ.டி. மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்கக அதிகாரிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 18 ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம், டீசல் விலை மற்றும் சுங்கக் கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 18 ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக  அறிவித்துள்ளது. இதனால், நாடு முழுவதும் 7 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் இயங்காது என சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஜிந்தர் சிங் கூறியுள்ளார். ஒரே நேரத்தில் டீசல் விலை, சாலைப் பயன்பாட்டுக்கான சுங்கக் கட்டணம், மூன்றாம் நபர் காப்பீட்டுத் தொகை என அனைத்தும் உயர்த்தப்பட்டதால் லாரி தொழிலையே … Read more

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஓரிரு மாதங்களில் மீண்டும் திறக்கப்படும்!ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராம்நாத் அதிரடி கருத்து

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தற்போது தற்காலிகமாக தான் மூடப்பட்டுள்ளது, ஓரிரு மாதங்களில் மீண்டும் திறக்கப்படும் என்று  ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார். முன்னதாக தூத்துக்குடியில் கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர்.இதனால் தூத்துக்குடி நகரமே கலவர பூமியாக மாறியது. போராட்டக்காரர்களை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். படுகாயம் அடைந்த 48 … Read more

இன்று பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தம்!

புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் இயக்கப்படும் ரோப் கார் சேவை, மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக இன்று  ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுகிறது. பழனி மலை மீது அமைந்துள்ள  இக்கோயிலுக்கு, முதியோர், மாற்றுத்திறனாளிகள் எளிதாக செல்லவும், விரைவான தரிசனத்துக்காகவும் ரோப்கார் வசதி அமைக்கப்பட்டது. இந்த ரோப்கார் அமைப்பை பராமரிக்கும் பணிகள் மாதத்தில் ஒருநாள்  மேற்கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிகளுக்காக இன்று ஒரு நாள் மட்டும் ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாகவும், நாளை வழக்கம்போல் ரோப்கார் செயல்படும் என்றும் கோயில் நிர்வாகம் … Read more

துணை மின் நிலையத்தில் சேலம் அருகே பயங்கர தீ விபத்து!தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

மத்திய அரசின் துணை மின்நிலையத்தில் சேலம் அருகே  பற்றி எரிந்த நெருப்பை, தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின், முற்றிலும் அணைத்தனர். தாரமங்கலம் சாலை – கே.ஆர். தோப்பில் மத்திய அரசின் பவர்கிரிட் கார்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் என்ற துணை மின் நிலையம் இயங்குகிறது. இதில் 2 தினங்களுக்கு முன் நிறுவப்பட்ட டிரான்ஸ்பார்மர் இன்று காலை வெடித்துச் சிதறியது. டிரான்ஸ்பார்மர் முழுவதும் நெருப்பு பற்றி எரிந்ததோடு, அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் சூழ்ந்தது. இதைக் … Read more

இன்று பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தொடக்கம்!

அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வை இந்தாண்டு முதல் இணையதளம் மூலம் நடத்துகிறது. இந்த ஆண்டு 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்களுக்கான ரேண்டம் கடந்த 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 42 இணைய சேவை மையங்களில் இன்று தொடங்கியுள்ள சான்றிதழ் சரிப்பார்ப்புப் பணிகள் வரும் 14-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.மாணவர்கள் இணையதளத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் நகல், 10, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் பிளஸ் 2 … Read more

நள்ளிரவில் சென்னையில் பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களை சுற்றிவளைத்த போலீஸ்!

நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில்  போலீசாரின் கட்டுப்பாட்டையும் மீறி பைக்ரேசில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் ரோந்து வாகனத்தில் துரத்திச் சென்றும், பேரிகார்டுகள் அமைத்தும் சுற்றிவளைத்து பிடித்தனர். சென்னையின் பல்வேறு இடங்களில் பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் இளைஞர்கள் பைக்ரேஸ்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று இரவு சென்னை மெரீனா கடற்கரைப் பகுதியில் சாலை ஓரத்தில் இருசக்கர வாகனங்களில் காத்திருந்த எராளமானவர்கள் திரைப்படக் காட்சிகள் போன்று ஒரே நேரத்தில் பைக் ரேசுக்கு … Read more