இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக 18 மாதங்களாக தொடர்ந்து சரிவு!

இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக, 18 மாதங்களாக தொடர்ந்து சரிவை எதிர் கொண்டிருக்கிறது. பொருளாதார வல்லுநர்கள்  பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ள நிலையில், ரூபாய் மதிப்பிற்கு ஏற்பட்டுள்ள சரிவு கவலையளிப்பதாக கூறியிருக்கின்றனர்.புதன்கிழமை நிலவரப்படி, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68 ரூபாய் 68 காசுகளாக சரிந்தது. 18 மாதங்களாக தொடர்ந்து சரிவின் எதிரொலியாக முன்னெப்போதும் இல்லாத வகையில், ரூபாயின் மதிப்பு சரிந்திருக்கிறது. 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி இருந்ததை … Read more

சென்னையில் காதலன் திருமணத்திற்கு மறுத்ததாக பெண் தற்கொலை முயற்சி!

திருமணம் செய்ய காதலன் மறுப்பதாக கூறி சென்னை மாதவரத்தில் கல்லூரி மாணவி 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மாதவரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரும்,பிகாம் முதலாம் ஆண்டு பயிலும் அந்த மாணவியும், 2 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் மாணவியின் வீட்டாருக்கு தெரியவந்ததால், திருமணம் செய்து கொள்ளலாம் என்று மணிகண்டனை அந்த பெண் வலியுறுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த மணிகண்டன் காதலியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மனமுடைந்த அந்த மாணவி வீட்டில் இரண்டாவது மாடியில் … Read more

இந்தியா கடற்படை 27 நாடுகளுடன் சேர்ந்து பிரம்மாண்ட போர் பயிற்சி!

அமெரிக்காவின் ஒரு மாநிலமாக மேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள ஹவாய் தீவு  செயல்பட்டு வருகிறது. இந்த தீவில் உள்ள பியர்ல் துறைமுகம் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட 26 நாடுகள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கடற்படை போர் பயிற்சி இங்கு இன்று தொடங்க உள்ளது. இதற்காக,நேற்று இந்திய கடற்படையில் உள்ள நவீன போர் கப்பலான ஐஎன்எஸ் சஹ்யாத்ரி கேப்டன் சாந்தனு ஜா தலைமையில் பியர்ல் துறைமுகத்திற்கு சென்றடைந்தது. கடல் பாதுகாப்பில் உள்ள அம்சங்களை புரிந்து … Read more

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினரை கொலை செய்ததாக 3 பேர் கைது!

கோவையைச் சேர்ந்த 3 பேரை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினரை கடத்தி கொலை செய்ததாக,  போலீசார் கைது செய்துள்ளனர். சிவமூர்த்தி என்பவர், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினரான இவர்,   திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காருடன் மாயமாகி விட்டதாகவும், அவரை செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, விசாரணையில் இறங்கிய போலீசார், சிவமூர்த்தியின் காரில் ஜி.பி.எஸ். கருவி இருந்ததால், … Read more

தமிழகம்தான் நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள முதல் மாநிலம்!முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள முதல் மாநிலம் தமிழகம்தான் என்று  தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கையின் போது உறுப்பினர்கள் நேற்று எழுப்பிய கேள்விக்கு இன்று பதில் அளித்தார். தமிழகத்தில் பொது ஒழுங்கை பராமரிப்பதில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். தமிழகத்தில் குற்றங்களின் விகிதம் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது  குறைவாக உள்ளதாகக் கூறிய அவர், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதிலும், நீதிமன்றத்தில் நிறுத்துவதிலும் காவல்துறையினர் சிறப்பாக செயல்படுவதாகக் கூறினார். குற்றவழக்குகளில் குற்றவாளிகளுக்கு … Read more

தமிழிசை எம்ஜிஆர் ரெகமண்டேசனில் எம்பிபிஎஸ் படித்தவர்!நான் மெரிட்டில் எம்.பி.பி.எஸ் படித்தேன்!அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்,தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுடன் விவாதத்திற்கு தயார் என்று  கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தாம் மெரிட்டில் எம்.பி.பி.எஸ். படித்ததாகவும், தமிழிசை ரெகமண்டேசனில் படித்ததாகவும், எனவே அவர் தான் அறிவாளி என்றும் தெரிவித்தார். சமுதாயம் குறித்து இழிவாகப் பேசியதற்காக தமிழிசை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தினார்.

மகாராஷ்ட்ரா அருகே விபத்துக்குள்ளான போர் விமானம்!

மகாராஷ்ட்ர மாநிலம் நாசிக் அருகே  ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வந்த சுகோய் 30 எம்கேஐஎஸ் (Sukhoi 30MKIs) ரக போர் விமானம்விபத்துக்குள்ளானது. பத்திரமாக இதில் இருந்த விமானிகள் இருவரும் மீட்கப்பட்டனர். தயாரிப்பு நிலையில் இருந்த இந்த விமானம், இன்னும் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்படாத நிலையில் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துரைமுருகன் நீங்கள் சிறப்பாக நடிக்கிறீர்கள்!இவ்வாறு ஜெயலலிதாவே கூறினார்!பன்னீர்செல்வம்

அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது நாட்டுப்புற கலைகளை ஊக்கப்படுத்துவது பற்றிய கேள்விக்கு  பதில் சொல்லிக் கொண் டிருந்தார். அப்போது  அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் 1 லட்சம் நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக குறிப்பிட்டார். அப்போது  அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பேசுகையில் குறுக்கிட்டு பேசிய துரைமுருகன் நாடகக் கலையை வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கரதாஸ் சுவாமிகள், ‘‘அருணாச்சல கவிராயர் ஆகியோர் எழுதிய வரிகளிலேயே அந்த நாடகங்களை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார். … Read more

நாடு முழுவதும் ஜூலை 20ஆம் தேதி திட்டமிட்டபடி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்!

நாடு முழுவதும் ஜூலை 20ஆம் தேதி திட்டமிட்டபடி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் என்று  மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி பேட்டியளித்துள்ளார். இது குறித்து  மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி கூறியதில்,நாடு முழுவதும் ஜூலை 20ஆம் தேதி திட்டமிட்டபடி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும்.மேலும்  டீசல் விலை, சுங்கக்கட்டணம், காப்பீட்டு கட்டணத்தை குறைக்கக்கோரி  லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் ஈடுபட உள்ளனர் என்று தெரிவித்தார்.

அன்பு நண்பர் அஜித்துடன் மீண்டும் கரம் கோர்ப்பதில் மகிழ்ச்சி !தல அஜித் குறித்து விவேக் குறித்து

விவேக் அஜித்துடன் மீண்டும் கரம் கோர்ப்பதில் மகிழ்ச்சி’ எனத் தெரிவித்துள்ளார். ‘விசுவாசம்’ அஜித் நடிப்பில் சிவா இயக்கிவரும் படம் ஆகும். ஹைதராபாத்தில் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், விரைவில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மதுரையை பின்னணியாகக் கொண்ட கதை என்றாலும், ஹைதராபாத் மற்றும் ராஜமுந்திரியில் செட் போட்டு படமாக்க இருக்கிறார்கள். நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். ‘விவேகம்’ … Read more