அன்பு நண்பர் அஜித்துடன் மீண்டும் கரம் கோர்ப்பதில் மகிழ்ச்சி !தல அஜித் குறித்து விவேக் குறித்து

விவேக் அஜித்துடன் மீண்டும் கரம் கோர்ப்பதில் மகிழ்ச்சி’ எனத் தெரிவித்துள்ளார். ‘விசுவாசம்’ அஜித் நடிப்பில் சிவா இயக்கிவரும் படம் ஆகும். ஹைதராபாத்தில் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், விரைவில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மதுரையை பின்னணியாகக் கொண்ட கதை என்றாலும், ஹைதராபாத் மற்றும் ராஜமுந்திரியில் செட் போட்டு படமாக்க இருக்கிறார்கள். நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். ‘விவேகம்’ … Read more

உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு!பணியாளர் தற்கொலைக்கு உயர் அதிகாரி பொறுப்பில்லை!

உச்சநீதிமன்றம்,பணிச்சுமையால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதற்கு அவருடைய மேலதிகாரி பொறுப்பில்லை என  தீர்ப்பளித்துள்ளது. மகாராஷ்டிரக் கல்வித்துறையில் துணை இயக்குநராகப்  அவுரங்காபாத்தில் பணியாற்றி வந்த கிசோர் பராசர் என்பவர் 2017ஆகஸ்டு மாதத்தில் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு மேலதிகாரியின் தூண்டுதலே காரணம் எனக் கூறி அவர் மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தனது  மேலதிகாரி கணவருக்கு அதிக வேலைகளைக் கொடுத்ததாகவும் விடுமுறை நாட்களிலும் வேலை செய்யச் சொன்னதாகவும் ஒரு மாத ஊதியத்தை நிறுத்தி வைத்ததாகவும், ஊதிய உயர்வை நிறுத்திவிடுவதாக மிரட்டியதாகவும் அவர் … Read more

அனிருத்தின் உறவினருடன் காதலில் சிக்கிய மஞ்சிமா நடிகை!

அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்திருந்தார் நடிகை மஞ்சிமா மோகன். அதன் பிறகு அவருக்கு எந்த பெரிய வாய்ப்பும் கிடைக்கவில்லை.கவுதம் கார்த்திக் ஜோடியாக தற்போது அவர் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அவர்  நடிகர் ரிஷியை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு ’ரிஷி என்னுடைய நெருங்கிய நண்பன். வெறும் வார்த்தைக்காக சொல்லவில்லை, உண்மையிலேயே என்னுடைய நல்ல நண்பன். நான் ஒருவருடன் டேட்டிங் போகிறேன் என்றால், குறைந்தபட்சம் அதைப்பற்றி ஒரு புகைப்படமாவது வெளிவந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி … Read more

தூத்துக்குடி வன்முறையில் கைது செய்யப்பட்ட 65 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய முடியாது!

ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டதாக 65 பேரின் ஜாமீனை தள்ளுபடி செய்யக்கோரும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22 ஆம் தேதி நடந்த போராட்டம் வன்முறையானதை தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்13 பேர் கொல்லப்பட்டனர். இந்தப் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 65 பேரையும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி சொந்த ஜாமீனில் விடுதலை செய்திருந்தார். அரசு தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் 65 பேருக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டதால் அதனை ரத்து … Read more

தூத்துக்குடி நகரத்திற்கு ஆபத்து!ஸ்டெர்லைட் ஆலையில் ஆபத்தை விளைவிக்கக் கூடிய ரசாயனங்கள் உள்ளது!ஸ்டெர்லைட் எச்சரிக்கை

“ஸ்டெர்லைட் ஆலையில் ஆபத்தை விளைவிக்கக் கூடிய ரசாயனங்கள் உள்ளன” என்று  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வேதாந்தா குழும வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளது.   கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் … Read more

மீண்டும் போலீசில் சிக்கிய நடிகர் ஜெய்!

மீண்டும் போக்குவரத்து போலீசாரிடம் நடிகர் ஜெய் சாலை விதிகளை மீறி செயல்பட்டதால்  சிக்கினார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் ஜெய் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக அடையாறு சாஸ்திரி நகர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கின் விசாரணைக்கு அவர் ஆஜராகாததால் சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. நீதிமன்றத்தில் சரணடைந்த அவருக்கு,பின்னர், 5 ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், 6 மாதங்களுக்கு அவரின் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது … Read more

பெண்ணின் உயிரைக் காக்க110 நிமிடங்களில் 1,200 கி.மீ தொலைவு கடந்த ‘இதயம்!

டெல்லியில் உள்ள 53-வயது பெண்ணுக்கு ,மும்பையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட இதயம் அடுத்த இரண்டரை மணிநேரத்தில் 1200 கி.மீ தொலைக் கடந்து பொருத்தப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. 42வயது ஆண் மும்பையில் விபத்தில் சிக்கிய நிலையில் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்தார். அவரின் இதயம் டெல்லியில் உள்ள ஒக்லா போர்டிஸ் எஸ்கார்ட் இதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 52 வயது பெண்ணுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. மிக விரைவாக மும்பையில் விமானம் மூலம் டெல்லிக்கும், விமானநிலையத்தில் … Read more

நீட் தேர்வு வினாத்தாளில் மொழிபெயர்ப்பு குளறுபடிக்கு மதிப்பெண் கோரும் வழக்கு ஒத்திவைப்பு!

நீட் தேர்வு வினாத்தாளில் மொழிபெயர்ப்பு குளறுபடிக்கு மதிப்பெண் கோரும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று விசாரணைக்கு வந்த  நீட் தேர்வு வினாத்தாளில் மொழிபெயர்ப்பு குளறுபடிக்கு மதிப்பெண் கோரும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தரவரிசைப்பட்டியலை வெளியிட ஏன் தடை விதிக்கக்கூடாது? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மேலும் இறுதி விசாரணைக்காக வழக்கை வரும் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள் மனு:3ஆவது நீதிபதியாக சத்தியநாராயணனை நியமித்தது உச்சநீதிமன்றம்!

தகுதிநீக்க வழக்கில் 3ஆவது நீதிபதியாக சத்தியநாராயணாவை நியமிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. முன்னதாக  எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த ஆண்டு கவர்னரிடம் மனு அளித்தனர். இதனால், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் ப.தனபாலிடம் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால் … Read more

ஷாருக்கான், அனில்கபூர், மாதுரி தீட்சித் ஆஸ்கார் அகாடமியின் புதிய உறுப்பினர்களாக நியமனம்!

ஆஸ்கர் அகாடமியின் புதிய உறுப்பினர்களாக,பாலிவுட் திரை நட்சத்திரங்கள் ஷாருக்கான், அனில்கபூர், மாதுரி தீட்சித் உள்ளிட்டோர்  இணைந்துள்ளனர்.   திரைப்படத்துறையில் பங்களிப்பு செய்த  இந்தியர்கள் 20 பேர் உள்பட 59 நாடுகளை சேர்ந்த 928 கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு  உறுப்பினர்களாக அழைப்பு விடுவிக்கப்பட்டிருந்தது. அதில், மூத்த நடிகர் நஸ்ருதின்ஷா, ஆதித்ய சோப்ரா, தபு, அலி ஃபஸால், மணிஷ் மல்ஹோத்ரா, சவுமித்ர சாட்டர்ஜி ஆகியோரும்   2018ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் அகாடமி உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஆஸ்கார் விருதுக்கானவர்களை  இந்த உறுப்பினர்களே … Read more