6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கா விட்டால், சுங்கச் சாவடிகளில் வரி செலுத்தாமல் செல்லும் போராட்டம் !

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உச்சநீதிமன்றம் வழங்கிய 6 வார கால அவகாசத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கா விட்டால், சுங்கச் சாவடிகளில் வரி செலுத்தாமல் செல்லும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். போச்சம்பள்ளியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, வேல்முருகன், மத்திய அரசுப்  பணிகளில் மறைமுகமாக வடநாட்டினருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதாகவும், இதனை உடனடியாக தடுத்திடவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். காவிரி மேலாண்மை வாரியம் … Read more

அக்டோபர் மாதத்திற்கு சந்திராயன் திட்டம் தள்ளி வைப்பு!

இஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளை  சந்திராயன் 2 திட்டம் அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சந்திராயன் திட்டத்தில் நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் சில சோதனைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும், இது நிறைவடைந்த பின் அக்டோபர் மாதத்தில் சந்திராயன் விண்கலம் ஏவப்படும் என்றும் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ரவுடிகள் தமிழகத்தில் இருக்க முடியாமல் பிற மாநிலங்களுக்கு ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதால் தான் ரவுடிகள் தமிழகத்தில் இருக்க முடியாமல் அடுத்த மாநிலத்திற்கு ஓடும் நிலையில் உள்ளனர் என தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இது தொடர்பாக பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரவுடிகள் எல்லா ஆட்சியிலும் இருந்தார்கள் என்றும், ஆனால் தாங்கள் அவர்களை கண்டுபிடித்து கைது செய்துள்ளதாகவும் கூறினார். அப்போது குறிக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர்  துரைமுருகன், எல்லா ஆட்சியிலும் ரவுடிகள் உள்ளனர் என்றும், ஆனால் கேக் வெட்டியது உங்கள் ஆட்சியில்தான்  என குறிப்பிட்டார். … Read more

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுகுவது தொடர்பாக கர்நாடகம் புதிய முடிவு..!

கர்நாடக மாநில எம்.பிக்கள் கூட்டத்தில் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனு தாக்கல் செய்யக்கூடாது, என  முடிவு செய்யப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, சமீபத்தில் விவாதித்த கர்நாடக அரசு, அடுத்தக்கட்டமாக கர்நாடக மாநில எம்.பிக்களின் கூட்டத்தை இன்று கூட்டியது. முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,  மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது, உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா மேல்முறையீடு செய்யக்கூடாது, என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகத் தகவல்கள் … Read more

கர்நாடகா தேர்தலை மனதில் கொண்டு காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நாடகமாடுகிறது..!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்  கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நாடகமாடுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா,  தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இது இயலாமை அல்ல என்றும் இழிவான அரசியல் என்றும் விமர்சித்துள்ளார்.   கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம் என … Read more

இருசக்கர வாகனம் கற்றுத்தருவதாக அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியர்..!10 ஆண்டுகள் சிறை!

பெரம்பலூர் மகிளா நீதிமன்றம், பெரம்பலூர் அருகே, சிறுமியை பலாத்காரம் செய்த  முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. பெரம்பலூர் மாவட்டம், கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவர், கடந்த 2016ம் ஆண்டு நவம்பர்  27ம் தேதி இதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியிடம் இரு சக்கர வாகனம் கற்றுத்தருவதாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, சிறுமியின் தாய் மஞ்சுளா, பெரம்பலூர் அனைத்து … Read more

கை செலவுக்காக தான் சினிமாவுக்கே வந்தேன்…!மனதுக்குள் எப்போதும் ஆன்மீக உணர்வுகள்…?

நடிகை ரகுல்பிரீத்சிங்  மனதுக்குள் எப்போதும் ஆன்மீக உணர்வுகள் இருப்பதால் எனக்கு நல்ல விஷயங்கள் தானாகவே அமைந்து விடுகிறது என்று தெரிவித்துள்ளார். நடிகை ரகுல்பிரீத் சிங் சூர்யா நடிக்கும் படத்தின் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். கார்த்தியுடன் அவர் நடித்த தீரன் ஹிட்டானது. இதனால் ராசியான நடிகை என்று பெயர் வாங்கி தமிழிலும் அதிக படங்களில் புக் ஆகி வருகிறார். நடிகை ரகுல்பிரீத் சிங் கூறுகையில், சிறுவயதில் ஆன்மீக விசயங்கள் பற்றி பல புத்தகங்களை படிப்பேன். இதனால் மனதுக்குள் எப்போதும் ஆன்மீக … Read more

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பிரதமர் மோடி வீட்டு முன்பாக தூக்கு?அய்யாக்கண்ணு அறிவிப்பு…!

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு , காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பிரதமர் மோடி வீட்டு முன்பாக தூக்குப் போடும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். நஞ்சில்லா உணவு, மரபணு மாற்ற விதைகளை தடை செய்தல், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை 100 நாள் விழிப்புணர்வு நடைபயணத்தை அய்யாகண்ணு மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக நேற்று மதுரைக்கு … Read more

பலத்தை அதிகரிக்க பாரதிய ஜனதா கட்சி மும்முரம்…!இறுதியில் வெற்றி யாருக்கு ?

இன்று உத்தரப்பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 25 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்  நடக்கிறது. மத்திய அரசுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத நிலையில், இன்றைய தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மேற்குவங்கம், தெலங்கானா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், 58 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியானது. இதற்கான தேர்தல் இன்று நடக்கும் நிலையில், ரவி சங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் உட்பட 33 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி ஏற்கனவே தேர்வு … Read more

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது!

20 ஆக குரங்கணியில் வனத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மதுரை மருத்துவமனையில் சென்னையைச் சேர்ந்த நிவ்ய ப்ரக்ருதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வந்தது. இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு மாணவிகள் வந்திருந்தனர். இதில் மொத்தம் 39 பேர் தீயில் சிக்கிக் கொண்டனர். தீவிரமான மீட்பு பணிகளுக்கு பிறகு 30 பேர் உயிருடன் மீட்கப்பட்டார். 9 பேர் … Read more