ஊரடங்கை பயன்படுத்தி அதிக விலைக்கு ஆவின் பாலை விற்றால் கடுமையான நடவடிக்கை : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஊரடங்கை பயன்படுத்தி அதிக விலைக்கு ஆவின் பாலை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பால் வள துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸை  முயற்சியில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிற நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து,கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால்  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகள் மட்டும், சில கட்டுப்பாடுகளுடன், குறிப்பிட்ட நேரம் திறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கை பயன்படுத்தி, ஆவின் … Read more

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த கேரள முதல்வர் பிரனாயி விஜயன்.!

கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இதில் 3 ஆம் இடத்தில் தமிழகம் உள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு காரணமாக அங்குள்ள பால் சுமார் 1,80,000 லிட்டர் வீணாகியுள்ளது.  இதனை தமிழக அரசிடம் கேரள அரசு சார்பில் கூறியுள்ளது. இதனை அடுத்து, தமிழகம் சார்பில் ஈரோடு ஆவின் பால் நிறுவனம் கேரளாவில் 50,000 லிட்டர் பாலை வாங்க ஒப்புக்கொண்டுள்ளதாம். இதனால் கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார் என தகவல் … Read more

 நாளை தங்கு தடையின்றி ஆவின் பால் கிடைக்கும்.! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.!

 நாளை பொதுமக்கள் நலன் கருதி ஆவின் பால் வினியோகிக்கப்படும்  அனைத்து ஆவின் கிளைகளிலும் பால் தங்கு தடையின்றி கிடைக்கும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ளார்.  கொரோனா வைரஸ் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை ஒருநாள் நாடு முழுவதும் சுய ஊரடங்கு நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என  பிரதமர் மோடி அனைத்து பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் நாளை தமிழகத்தில் அனைத்து கடைகள், ஹோட்டல்கள் , டாஸ்மாக் மதுபான கடைகள் நாளை ஒருநாள் மட்டும் மூடப்படும் … Read more

13 ஆவின் இயக்குனர்களில் 11 பேரின் தேர்விற்கு தடை விதித்தஉயர்நீதிமன்ற கிளை .!

மதுரை ஆவின் நிர்வாகத்தை பொறுத்தவரை 17 இயக்குனர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.இந்த 17 இயக்குனர்களின் தேர்வு தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதற்கான தேர்வு இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டவர்களில் 13 பேரை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆவின் இயக்குனரகம் கடந்த 01-ம் தேதி அறிவித்தது .இந்த போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதில்  முறைகேடு நடந்தாக கூறி மதுரையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் … Read more

ஆவின் பால்விலை உயர்வை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சமீபத்தில் தமிழக அரசு ஆவின் பால்விலையை  உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது.இந்த நிலையில் பால் விலைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு ஓன்று தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக முனி கிருஷ்ணன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.அதில்,பால் விலை உயர்வு மக்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது என்று தெரிவித்தார்.இதனையடுத்து இந்த பல்லக்கின் விசாரணையை வருகின்ற செவ்வாய் கிழமை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஆவின் பால் 6 ரூபாய் விலையேற்றம்! எந்தெந்த கலர் எவ்வளவு விலை? முழு விவரம் உள்ளே!

ஆவின் பால் லிட்டருக்கு 6 ரூபாயாக  உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்தது . பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதால் பாலின் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாகவும் இதனால் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என்று அரசு தெரிவித்தது .இந்த விலை உயர்வு குறித்து பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் . இதனிடையில் நள்ளிரவு முதல் ஆவின் பால் விலையேற்றம் அமலுக்கு வந்துள்ளது .இதனிடையே தயிர் ,மோர் ,நெய் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விலை உயரக்கூடும் என பொதுமக்கள் … Read more

காலி ஆவின் பால் கவர்களுக்கு காசு!ஆவின் பால் நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு!

நமது அன்றாட வாழ்வில் பால் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது. அந்தவகையில் நாம் தினமும் காலையிலும், மாலையிலும் தேநீர் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். தினமும் நாம் பால் உபயோகித்து வருகிறோம். இந்நிலையில், தமிழக அரசு மறு சுழற்சி செய்ய முடியாத நெகிழி பொருட்களுக்குத்தடை விதித்த நிலையில், பால் உட்பட பிளாஸ்டிக் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆவின் நிர்வாகம் சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கில், ஆவின் பால் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. … Read more

சிறப்பு சலுகை ! நாளை ஒரு நாள் மட்டுமே – ஆவின் நிர்வாகம் அறிவிப்பு!

நாளை ஜூன்-1 உலக பால் தினத்தை முன்னிட்டு ஆவின் பால் பொருட்களுக்கு மட்டும் சிறப்பு சலுகையை அந்த நிறுவனம் அளித்துள்ளது.அதன்படி, நாளைய தினம் ஆவின் பாலகங்களில் ஆவின் பால் பொருட்கள் வாங்கும் ஒவ்வொருவருக்கும் 5 சதவீதம் வரை சிறப்பு சலுகையானது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளம் மூலம் வாங்க விரும்புவோரும் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக்கு விற்பனை செய்யப்படும் ஆவின் பால்…..விற்பனையை அமைச்சர் தொடங்கி வைத்தார்…!!

சிங்கப்பூர் மற்றும் கத்தார் நாடுகளுக்கு ஆவின் பால் விற்பனையை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடக்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள ஆவின் பால் தமிழகமட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.இந்நிலையில் தமிழக அரசின் ஆலோசனைப்படி கூடுதலாக சிங்கப்பூர் , ஹாங்க்காங் மற்றும் கத்தார் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஆவின் பாலை விற்பனை செய்ய வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தமிழக ஆவின் பால் கத்தார் நாட்டுக்கு விற்பனை செய்யும் பணியை தமிழக பல்வளத்துறை அமைச்சர் … Read more