புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!

புதுச்சேரி காரைக்காலில் நேற்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, மழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, நேற்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மக்களே அலார்ட்டா இருங்க..! இந்த 11 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..! – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில், 11 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில், 11 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர்,தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை,கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, தஞ்சை, ராமநாதபுரம், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி … Read more

டிசம்பர் வரைக்கும் மழை இருக்கே எப்படி சமாளிப்பாங்க – ஜெயக்குமார்

இரண்டு நாள் மழைக்கே இப்படி பதறுகிறீர்கள் இன்னும் மழை இருக்கே என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கொட்டி தீர்த்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைநீர் தேங்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 2 நாள் மழைக்கே சென்னை இப்படி தத்தளிக்கிதே, டிசம்பர் வரைக்கும் மழை இருக்கே எப்படி சமாளிப்பாங்க என கேள்வி எழுப்பியுள்ளார். … Read more

#RainAlert : இந்த 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

இன்றும் நாளையும் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இன்றும் நாளையும் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கரூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் … Read more

ஒரு நாள் மழைக்கே தத்தளிக்கும் சென்னை! – மநீம

கனமழையை எதிர்கொள்ள கூடுதல் ஏற்பாடுகள் அவசியம் என்று மநீம அறிக்கை.  தமிழகத்தில்  தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இதற்கான பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம், ஒருநாள் மழைக்கே சென்னை தத்தளிப்பதாகவும், கனமழையை எதிர்கொள்ள கூடுதல் ஏற்பாடுகள் அவசியம் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நாள் மழைக்கே தத்தளிக்கும் சென்னை! கனமழையை எதிர்கொள்ள கூடுதல் ஏற்பாடுகள் அவசியம்! … Read more

#RainAlert : தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு…!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இன்று கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் … Read more

பருவமழை – சென்னை மாநகராட்சி மண்டலங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்..!

வடகிழக்கு பருவமழையையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழையால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடு குறித்து முதல்வர் தலைமையிலும் ஆலோசனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து, வடகிழக்கு பருவமழையையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழையையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்#CMMKSTALIN |#TNDIPR … Read more

இன்று இந்த 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரிக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக இன்று 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 5ம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரிக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று … Read more

கனமழை : இன்று இந்த 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…!

கனமழை காரணமாக இன்று 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை காரணமாக இன்று 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், நாகப்பட்டினம், திருவாரூர்,  மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.  

சென்னை மக்களே அலர்ட்டா இருங்க..! வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு..!

தமிழகத்தில் சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உட்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.