டிசம்பர் வரைக்கும் மழை இருக்கே எப்படி சமாளிப்பாங்க – ஜெயக்குமார்

இரண்டு நாள் மழைக்கே இப்படி பதறுகிறீர்கள் இன்னும் மழை இருக்கே என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கொட்டி தீர்த்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைநீர் தேங்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 2 நாள் மழைக்கே சென்னை இப்படி தத்தளிக்கிதே, டிசம்பர் வரைக்கும் மழை இருக்கே எப்படி சமாளிப்பாங்க என கேள்வி எழுப்பியுள்ளார்.

பல இடங்களில் மோட்டார் போட்டு தண்ணீரை இறைக்கிறார்கள், வாய்கால்கள் வழியாக மழை நீர் போகவில்லையா என்றும் கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் சொந்த தொகுதி கொளத்தூரில் மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்படுகிறது.
வாய்க்கால் மூலமாக தண்ணீர் போகவில்லை என்று விமர்சித்தார்.

உள்ளாட்சி துறை அமைச்சர் மழைநீர் வடிகால் 300 இடங்களை தேர்வு செய்து பனி செய்தோம், 3 இடத்தில் தான் தண்ணீர் தேங்கியது என கூறுகிறார். நாங்கள் செய்த பிளானை நீங்கள் செயல்படுத்தியதாக தெரிவித்தார். மழைநீர் வடிகால் அமைக்கும் பணி அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. திமுகவின் இயலாமை, திறமையின்மை காரணமாக மழைநீர் தேங்கி நிற்கிறது என குற்றசாட்டினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment