#BREAKING: சீர்காழி, தரங்கம்பாடி – ரூ.1,000 வழங்க முதலமைச்சர் உத்தரவு

மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க முதலமைச்சர் உத்தரவு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கப்படி வட்டங்களில் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பகுதிகளை இன்று ஆய்வு செய்த பின் முதலமைச்சர் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும், கடும் மழையினால் சேதமடைந்துள்ள பயிர்கள் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

வெள்ளபாதிப்பு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!

வெள்ளத் தணிப்பு – அகற்றும் பணிகளைக் கவனமாகவும் துரிதமாகவும் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் ட்வீட்.  தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவாக 44 செ.மீ மழை ஒரே நாளில் பதிவானது. இந்த நிலையில், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் … Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழை!

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என தகவல். தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், … Read more

மக்களின் குறைகள் தீர்க்கப்படும்.. எதிர்க்கட்சிகள் பற்றி கவலையில்லை – முதலமைச்சர்

அரசியல் செய்வதற்காக எதிர்க்கட்சிகள் எதையாவது கூறுவது பற்றி கவலையில்லை என வெள்ள ஆய்வுக்கு பிறகு முதலமைச்சர் பேட்டி. வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மயிலாடுதுறை மற்றும் சீர்காழி சென்றுள்ளார். அங்கு வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். சீர்காழியில் 122 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 44 செமீ கனமழை பெய்துள்ளது. இந்த வரலாறு காணாத கனமழை … Read more

மக்களே அலார்ட்டா இருங்க..! இந்த 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…!

இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.  தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய … Read more

தமிழகத்தில் மழை – எந்த மாவட்டத்தில் எல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா..?

கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கிய நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் தேங்கி நிற்கும் மழை நீர் பம்ப்செட் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் … Read more

#Red Alert: டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! – வானிலை மையம்

கடலூர், டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. வடகிழக்கு பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தாலும், தமிழகத்தில் மிக கனமழை தொடரும் என்றும் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்பட 17 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, தேனி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, … Read more

#RainUpdate: சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத மழை.! ஒரே நாளில் 44 செமீ.!

தமிழகத்தில் சீர்காழி உள்ளிட்ட இடங்களில் மிக கனமழைக்கு மேகவெடிப்பு காரணம் இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வாங்க கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது, குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக … Read more

தட்டச்சு தேர்வு கனமழை காரணமாக ஒத்திவைப்பு!

தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை எதிரொலியாக தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு. தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கவிருந்த தட்டச்சு தேர்வு கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தட்டச்சு தேர்வு நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் தேர்வு வாரிய தலைவர் அறிவித்துள்ளார். இந்த தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் எழுத இருந்த நிலையில் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, புதிய … Read more

#BREAKING: உருவானது புதிய காற்றழுத்த பகுதி.! தமிழகத்தில் கனமழை.! – வானிலை மையம் எச்சரிக்கை.!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வளிமண்டல சுழற்சி மேலும் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று வரும் 12-ம் தேதிக்குள் … Read more