தமிழகத்தில் மழை – எந்த மாவட்டத்தில் எல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா..?

கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பருவமழை தொடங்கிய நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் தேங்கி நிற்கும் மழை நீர் பம்ப்செட் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு உள்பட குன்றத்தூர் தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தின் நன்மங்கலம், வடக்கால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், அனகாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நன்மங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி, மானாம்பதி அரசு மகளிர் நிலைப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment