தமிழகத்திலேயே சீர்காழியில் அதிகளவாக 24 செமீ அதி கனமழை!

SIRKALI RAIN

தென்மேற்கு வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. முதலில் வட மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில், அடுத்து தென் மாவட்டங்களை தாக்கியது. தற்போது டெல்டா மாவட்டங்களில் நேற்று முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. அதன்படி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட  மாவட்டங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்துள்ளது. இந்த நிலையில், … Read more

#BREAKING: சீர்காழி, தரங்கம்பாடி – ரூ.1,000 வழங்க முதலமைச்சர் உத்தரவு

மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க முதலமைச்சர் உத்தரவு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கப்படி வட்டங்களில் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பகுதிகளை இன்று ஆய்வு செய்த பின் முதலமைச்சர் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும், கடும் மழையினால் சேதமடைந்துள்ள பயிர்கள் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மக்களின் குறைகள் தீர்க்கப்படும்.. எதிர்க்கட்சிகள் பற்றி கவலையில்லை – முதலமைச்சர்

அரசியல் செய்வதற்காக எதிர்க்கட்சிகள் எதையாவது கூறுவது பற்றி கவலையில்லை என வெள்ள ஆய்வுக்கு பிறகு முதலமைச்சர் பேட்டி. வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மயிலாடுதுறை மற்றும் சீர்காழி சென்றுள்ளார். அங்கு வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். சீர்காழியில் 122 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 44 செமீ கனமழை பெய்துள்ளது. இந்த வரலாறு காணாத கனமழை … Read more

சாராய விற்பனை – 16 காவலர்களை மாற்றம் செய்து டிஐஜி அதிரடி உத்தரவு!

சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 16 பேர் கூண்டோடு மாற்றம் செய்து டிஐஜி உத்தரவு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சாராய விற்பனையை தடுக்க தவறியதாக மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் 16 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்ஐ பார்த்திபன் உள்ளிட்ட 16 போலீசார் கூண்டோடு மாற்றப்பட்டனர். சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் 16 பேரை திருவாரூர், தஞ்சைக்கு மாற்றி டிஐஜி கயல்விழி உத்தரவிட்டார். ஆய்வாளர் கவிதா ஏற்கனவே மாற்றப்பட்ட … Read more

#Breaking : சீர்காழி பகுதியில் பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட நில அதிர்வு..! அதிர்ச்சியில் மக்கள்…!

சீர்காழி பகுதியில் பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட நில அதிர்வு. மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார், கொள்ளிடத்தில் பயங்கர சத்தத்துடன் கூடிய நில அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் தகவல் அளித்துள்ளனர். காரைக்கால் பகுதியிலும் பயங்கர வெடி சத்தத்துடன் நிலா அதிர்வு உணரப்பட்டதற்காக மக்கள் தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்து மக்கள்  கூறுகையில், விமானம் போன்ற ஒன்று தாழ்வாக பறந்து சென்றதற்கு பின் தான் இந்த நில அதிர்வை மக்கள் உணர்ந்ததாக  தெரிவிக்கின்றனர்.