புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!

புதுச்சேரி காரைக்காலில் நேற்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, மழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, நேற்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment