எல்லாரும் இனி ஹெல்மட் போடுங்க..!! ஹெல்மட் விழிப்புணர்வு.

செய்துங்கநல்லூர், தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில்  காவல் துறை சார்பில்  ஹெல்மெட்  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இப்பேரணிக்கு ஆர்.சி பள்ளித் தலைமை ஆசிரியை அமலா  தலைமை தாங்கினார். எஸ்.ஐ.பாத்திமா பர்வீன், ரவிகுமார்  முன்னிலை  வகித்தார் .  ஆசிரியர் ஸ்டாலின் இந்த விழிப்புணர்வு பேரணியை வரவேற்றார்.ஆர்.சி பள்ளியில் இருந்து பேரணியை இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன்  துவக்கிவைத்தார். ஹெல்மட் அணிய வேண்டும் , பைக்களில் ஹெல்மட் அணியாமல் செல்லக்கூடாது என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வைகையில் நடைபெற்ற இந்த பேரணி  முக்கிய வீதிகள் வழியாக செய்துங்கநல்லூர் காவல்  … Read more

தமிழகமே முதலிடம்..!! தமிழக அமைச்சர் பேட்டி.

இந்தியாவில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து 5–வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பெருமிதத்துடன் கூறினார். கோவில்பட்டி, நேற்று தமிழக அமைசர் இல்லதிருமண விழாவுக்கு வந்த சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பத்திரிக்கையாளரிடம் கூறியது.. இந்தியாவில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து 5–வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது என்று கூறினார்.தொடர்ந்து அவர் கோரிய விவரம் வருமாறு … இந்தியாவில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து … Read more

கோவில்பட்டியில் மணமக்களை வாழ்த்திய தமிழக துணை முதல்வர்..!!

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமணம் நேற்று நடந்தது. இதில், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமணம் நேற்று நடந்தது. இதில், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமணம்தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ–இந்திராகாந்தி தம்பதியர் மகன் அருண்குமாருக்கும், சென்னை தினகரன்–சாந்தி … Read more

தண்ணீர் எங்கே..?பரிதாபத்தில் நெல்லை மக்கள்..!!

சமீபத்தில் கேரளாவில் கனமழை பெய்து அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றது.குற்றாலம் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.கனமழை இப்படி கொட்டியும் , வெள்ளம் அருவிகளில் பெருக்கெடுத்து ஓடியும் மேற்குதொடர்ச்சி மலைக்கு சம்பந்தமான தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்தானது அப்படி பேசும்படி இல்லை என்பது மக்களின் கவலையாக இருக்கின்றது. தாமிரபரணி ஆற்றில் வரும் நீரின் அளவுக்கு கரணம் மணல் கொள்ளையாக இருக்கும் என்று மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.அண்டை மாநிலம் கேரளத்தில் அவ்வளவு மழை பொழிந்து தண்ணீரை காணோம் என்ற தவிப்பில் … Read more

விளாத்திக்குளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்…!!

ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி கேட்டு புதூர் யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை விளாத்திகுளம் தாலுகா புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நம்பிபுரம் பஞ்சாயத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் அனைவருக்கும் பணி  அளிக்கப்படவில்லை. வீட்டில் கழிப்பறை கட்டினால் தான், வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்கப்படும் என பஞ்சாயத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தில் ஒரு நாளுக்கு ரூ.224 சம்பளம். ஆனால் இங்குள்ள தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.160 மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், முதியோர் ஓய்வூதியம் … Read more

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி..!!

தூத்துக்குடி மாவட்டம்  முக்காணி குருவிதுறையை சேர்ந்தவர் தொம்மைசிலுவை மகன் பிரபாகர்(37).  கூலிதொழிலாளியான இவர், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து சென்ற பிரபாகர் மாயமானார். இந்நிலையில் நேற்று காலை தாமிரபரணி ஆற்றில் இறந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக ஆத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் ஆற்றில் மூழ்கி இறந்தது பிரபாகர் என்பது தெரியவந்தது. உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத … Read more

எங்களுக்கு இடம் வேண்டும் மக்கள் கோரிக்கை..!!

தூத்துக்குடி மாவட்டம் , வைகுண்டம் தாலுகாவில் உள்ள  சந்தையடிதெரு, குருசு கோயில்தெரு, ஓடைப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் சார்பாக தூத்துக்குடி மாவட்ட  கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.அதில் , எங்கள் பகுதியில் 22 குடும்பங்கள் 40 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். தற்போது புதிதாக வந்த வட்டாட்சியர், ஓடைபுறம்போக்கில் வீடு கட்டியுள்ளீர்கள். உடனே காலி செய்யுங்கள் என எங்களை வற்புறுத்தி வருகிறார்.நாங்கள் இந்த இடத்தை காலி செய்து விட்டால் மாற்று இடத்துக்கு எங்கே போவோம்  எனவே எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். … Read more

சாத்தான்குளம் மக்கள் பஸ் வசதி கேட்டு மனு..!!

நின்று போன மினி பஸ்சை நிரந்தரமாக இயக்க கோரி சாத்தான்குளம் தாலுகா, அரசூர் கிராமம் மேட்டுவிளை பகுதி மக்கள் ஜமாஅத் தலைவர் காசிம் மற்றும் எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் காதர் மைதீன், செயலாளர் மைதீன்கனி, பொருளாளர் கௌது மைதீன் உள்ளிட்டோருடன் வந்து நேற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டரை சந்தித்து அளித்த மனு அளித்தனர் அதில் :எங்கள் ஊர் வழித்தடத்தில் திசையன்விளை-பெரியதாழை செல்லும் மினிபஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அது எங்கள் ஊருக்குவராமல் மாற்றுப்பாதையில் சென்று வந்தது. தற்போது அந்த பாதையில் … Read more

கோவில்பட்டியில் அறிவியல் கண்காட்சி ..!!

கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் கோவில் திடலில் உள்ள விஸ்வகர்மா உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களினால் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்ட்து.பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்பால் நடைபெற்ற இந்த கண்காட்சி மிகவும் வரவேற்பை பெற்றது.

தூத்துக்குடி: துப்பாக்கிச்சூடு தொடர்பான 15 வழக்குகள் சிபிஐக்கு மாற்றம்..!!6 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து..!!உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான 15 வழக்குகள் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்புடைய அனைத்து வழக்குகளும் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றம் செய்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை. மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக  6 பேர் மீது பதிவு செய்யப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்தது உயர்நீதிமன்றம். DINASUVADU