RRvsDC : டெல்லி அணிக்கு 2-வது தோல்வி ..!! 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அபார வெற்றி ..!

RRvsDC : ஐபிஎல் தொடரின் 9-தாவது போட்டியாக ராஜஸ்தான், டெல்லி அணி இடையே நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் மூலம் பேட்டிங் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள்  அடுத்தடுத்து சொர்ப்ப ரங்களில் ஆட்டமிழந்து,  36-3 என்ற இக்கட்டான நிலையில் தத்தளித்தது. இதனால், அடுத்து களமிறங்கிய அஸ்வினும், ரியான் பராகும் நிதானத்துடன் விளையாடி அணியின் ஸ்கோரை படி படியாக உயர்த்தினார்கள். இவர்களது அபார கூட்டு விளையாட்டால் … Read more

டி20-யிலும் ஓய்வை அறிவிக்க உள்ள டேவிட் வார்னர்..! எப்போது தெரியுமா..?

ஆஸ்திரேலிய தொடக்க வீரரான டேவிட் வார்னர் டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற உள்ளார். இவர் ஏற்கனவே ஒருநாள் (ODI) மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், விரைவில் டி20 போட்டிகளில் இருந்தும் டேவிட் வார்னர் ஓய்வு பெற உள்ளார். டேவிட் வார்னர் இந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்காக  கடைசியாக விளையாட  உள்ளார். உலகக்கோப்பைக்கு  பிறகு சர்வதேச  டி20 போட்டியில் இருந்தும் ஓய்வு … Read more

மைதானத்தின் நடுவில் அழ ஆரம்பித்த டேவிட் வார்னர்?

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.  சிட்னியில் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, டேவிட் வார்னர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு நடு மைதானத்தில் அழுது விட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு  டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் வார்னர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், டேவிட் வார்னரின் பிரியாவிடை டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சிட்னியில் விளையாடிய … Read more

தொலைந்து போன முக்கிய பொருள்.. வார்னருக்கு நடந்த சோகம்..!

பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி ஜனவரி 3(நாளை ) முதல் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்குப் பிறகு, ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். மூன்றாவது போட்டிக்கு முன் டேவிட் வார்னரின் பச்சை நிற தொப்பி காணவில்லை என தெரிவித்தார். இதனால் வார்னர் சற்று வருத்தம் அடைந்தார். பச்சை நிற தொப்பி காணவில்லை என்பதை தொடர்ந்து டேவிட் வார்னர் ஒரு வீடியோவை சமூக … Read more

ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த டேவிட் வார்னர்..!

நாளை மறுநாள் தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இன்று  செய்தியாளர்களிடம் வார்னர் கூறுகையில், ” 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையின் போது ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி யோசித்தேன். இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள வேறு சில லீக்குகளில் விளையாட முடியும். மேலும் வார்னர் தனது மனைவி கேண்டிஸ் மற்றும் மூன்று மகள்கள் ஐவி, இஸ்லா மற்றும் … Read more

சரித்திரம் படைத்த டேவிட் வார்னர்.. ஸ்டீவ் வாக் சாதனை முறியடிப்பு..!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் வரலாற்று சாதனை படைத்துள்ளார். வார்னர் 38 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், இந்த காலகட்டத்தில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் வரலாறு படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள் குவித்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை டேவிட் வார்னர் பெற்றுள்ளார். இதன் மூலம் வார்னர் ஸ்டீவ் வாக் சாதனையை டேவிட் வார்னர்  முறியடித்தார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தனது … Read more

இன்னும் இரு குழந்தைகளை பெற்று மகிழ்ச்சியாக இருங்கள் – கோலிக்கு டேவிட் வார்னர் அறிவுரை..!

ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரக்கூடிய விராட் கோலி அவர்கள் தொடர்ச்சியாக குறைவான ரன்களை மட்டுமே எடுத்து வருகிறார். அண்மையில் இவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் மட்டும் அதிக அளவில் ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில் விராட் கோலி தொடர்ந்து குறைந்த அளவிலான ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி வருவதால் அவர் சிறிது நாட்கள் ஓய்வு எடுத்துக் … Read more

நான் ஏன் சதம் அடிக்கவில்லை என என் குழந்தைகள் கேள்வி கேட்கிறார்கள் .., டேவிட் வார்னர்!

நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 ஆம் ஆண்டுக்கான 15 வது சீசன் தொடரில் நேற்று டெல்லி கேப்பிடல் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர் டேவிட் வார்னர் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த 116 ரன்கள் இலக்கை, 30 பந்துகளில் 60 ரன் குவித்து எடுத்து முடித்தார். இந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தாலும், இடதுகை ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் சதம் அடித்திருந்தார் என்பதால் … Read more

கோகோ-கோலா பாட்டில்கள் அகற்றம்-ரொனால்டோவின் வழியில் வார்னர்?…!

கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவை போன்று ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் கோகோ-கோலா பாட்டில்களை அகற்றிய சம்பவம் நேற்று அரங்கேறியுள்ளது. ஹங்கேரிக்கு எதிரான போர்ச்சுகலின் யூரோ 2020 கால்பந்தின் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர் சந்திப்பில்,கால்பந்து சூப்பர் ஸ்டார் ரொனால்டோ,மேசையில் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டில்களை அகற்றி,தண்ணீர் பாட்டில்களைப் பிடித்துக் கொண்டு “தண்ணீர் அருந்தவும்” என்று கூறினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கோகோ கோலாவின் பங்குகள் 1.6 சதவீதம் சரிந்ததாகவும், இதனால் நிறுவனத்திற்கு 5.2 பில்லியன் டாலர் … Read more

இளையராஜாவின் “இஞ்சி இடுப்பழகி” பாடலுக்கு டிக்டாக் செய்த டேவிட் வார்னர்….! – வைரல் வீடியோ

இளையராஜாவின் “இஞ்சி இடுப்பழகி” பாடலுக்கு டிக்டாக் செய்த டேவிட் வார்னர். ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மன் டேவிட் வார்னர் கொரோனா காரணமாக ஊரடங்கை குடும்பத்துடன் டிக்டாக் செய்து வருகிறார். இவர் ஏற்கெனவே தெலுங்கு பாடலான “புட்டபொம்மா” பாடலுக்கு டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மாபெரும் வைரலாகியது. இந்நிலையில், இவர் இளையராஜாவின் ‘இஞ்சி இடுப்பழகி” பாடலின் இசைக்கு குடும்பத்துடன் டிக்டாக் செய்துள்ளார். தற்போது இந்த  வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.    … Read more