இன்னும் இரு குழந்தைகளை பெற்று மகிழ்ச்சியாக இருங்கள் – கோலிக்கு டேவிட் வார்னர் அறிவுரை..!

David Warner

ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரக்கூடிய விராட் கோலி அவர்கள் தொடர்ச்சியாக குறைவான ரன்களை மட்டுமே எடுத்து வருகிறார். அண்மையில் இவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் மட்டும் அதிக அளவில் ரன்கள் எடுத்திருந்தார்.

இந்நிலையில் விராட் கோலி தொடர்ந்து குறைந்த அளவிலான ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி வருவதால் அவர் சிறிது நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் உள்ளிட்ட பலர் கூறிவருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக டெல்லி அணி வீரர் டேவிட் வார்னரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது விராட் கோலி மீண்டும் சிறப்பாக விளையாடுவதற்கு நீங்கள் என்ன அறிவுரை கூறுவீர்கள் என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த டேவிட் வார்னர் விராட் கோலிக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். பார்ம் என்பது தற்காலிகமானது தான். கிளாஸ் தான் நிரந்தரமானது. எனவே நீங்கள் அதனை தவற விடாதீர்கள். ஏனென்றால் உங்களுக்கு தற்போது நடக்கும் அனைத்துமே எல்லா வீரர்களுக்கும் நடக்கக்கூடிய ஒன்று தான்.

எனவே நீங்கள் இன்னும் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு வாழ்க்கையையும் கிரிக்கெட்டையும் மகிழ்ச்சியாக அனுபவியுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.