நான் ஏன் சதம் அடிக்கவில்லை என என் குழந்தைகள் கேள்வி கேட்கிறார்கள் .., டேவிட் வார்னர்!

David Warner

நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 ஆம் ஆண்டுக்கான 15 வது சீசன் தொடரில் நேற்று டெல்லி கேப்பிடல் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர் டேவிட் வார்னர் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த 116 ரன்கள் இலக்கை, 30 பந்துகளில் 60 ரன் குவித்து எடுத்து முடித்தார்.

இந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தாலும், இடதுகை ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் சதம் அடித்திருந்தார் என்பதால் அவரின் மகள்கள் ஏன் உங்களால் சதம் அடிக்க முடியவில்லை என கேட்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது மகள்கள் கூறுகையில், ஜோஸ் பட்லர் போல ஏன் பூங்காவை விட்டு வெளியே உங்களால் சதம் முடியவில்லை என்று கேட்கிறார்கள்.

ஆனால் 60 ரன்கள் மட்டும் போதுமானது என்பது அவர்களுக்கு தெரியவில்லை. இருந்தாலும் உலகெங்கிலும் உள்ள என் குழந்தைகள் போன்ற சிறியவர்களும் இந்த விளையாட்டை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.