அசத்தல்…வடசென்னையில் குத்துச்சண்டை மையம்;ஒலிம்பிக்கில் தங்கம் தேடுதல் – முதல்வர் அதிரடி அறிவிப்பு!

விளையாட்டுத்துறையில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் திமுக அரசு மேற்கொள்ளும் என்று தமிழக சட்டப் பேரவையில் தற்போது உரையாற்றி வரும் முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

  • அந்த வகையில்,வடசென்னையில் ரூ.10 கோடி மதிப்பில் குத்துச்சண்டை மையம் அமைக்கப்படும் என்றும்,சென்னைக்கு அருகே மெகா விளையாட்டு நகரம் அமைக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
  • மேலும்,”ஒலிம்பிக்கில் தங்கம் தேடுதல்” என்ற திட்டம் ரூ.25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது என முதல்வர் அறிவித்துள்ளார்.
  • அதே சமயம்,அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தலா ரூ.3 கோடி செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
  • அதைப்போல,மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென பிராமாண்ட மைதானம் அமைக்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

இதனிடையே,தமிழகத்தின் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும்,தமிழக வீரர்கள் பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுவர் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.

 

.