அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான ஊழல் வழக்கு.! பிடிவாரண்ட் பிறப்பிக்கவும் உத்தரவு.!

Minister I Periyasamy case in madras high court

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த 2006 முதல் 2011 வரையில் திமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த போது வீட்டுவசதி துறைக்கு சொந்தமான இடத்தை திமுக பிரமுகருக்கு மாற்றியது என அவர் மீது வழக்கு பதியப்பட்டது. 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்சஒழிப்புத்துறை சார்பில் பதியப்பட்ட இந்த வழக்கானது எம்எல்ஏ, எம்பிக்கள் வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று … Read more

முன்னாள், இன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு… இன்று விசாரணை..!

chennai High Court

வருமானத்திற்கு அதிகமாக சொத்து செய்தது உள்ளிட்ட வழக்குகளில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி , வளர்மதி மற்றும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமைச்சர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்  தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்குகளை எந்த நீதிபதி … Read more

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது – ஐகோர்ட்

chennai high court

அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததை அடுத்து, நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். அதிமுகவில் நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்க கோரி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சியின் உட்கட்சித் தேர்தல் … Read more

தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு.! உச்சநீதிமன்றம் நோட்டீஸ்….

Supreme court of India - MS Dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமாகிய மஹேந்திர சிங் தோனி கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் விளையாட்டு போட்டியில் சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக அவர் மீது புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட குழுவில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் இடம்பெற்று இருந்தார். FIFA உலகக்கோப்பை 2026… அட்டவணை வெளியானது..! அப்போது ஒரு தனியார் டிவி நிகழ்ச்சியில் பேசிய சம்பத்குமார், எஸ்.தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டது போன்ற கருத்துக்களை … Read more

முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு… இன்று முதல் விசாரணை..!

chennai High Court

வருமானத்திற்கு அதிகமாக சொத்து செய்தது உள்ளிட்ட வழக்குகளில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி , வளர்மதி மற்றும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறார். ஜார்க்கண்ட் அரசு தப்புமா..? இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு..! இந்த வழக்குகள் கடந்த ஜனவரி 9-ம் தேதி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. … Read more

அபராதம் செலுத்த மன்சூர் அலிகானுக்கு அவகாசம்.!

Mansoor-Ali-Khan-2

நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி பேசிய விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இந்த சர்ச்சை குறித்து மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரஞ்சீவி, குஷ்பு, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல திரைபிரபலங்களும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர். இதனாலே இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது. பிறகு இந்த விவகாரத்தில் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகை குறித்து அவதூறு பேசியதாக மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டு இருந்தது. இது குறித்து நடிகர் … Read more

TNPSC: குளறுபடிகளை தடுக்க விசாரணைக்குழு அமைக்க உத்தரவு.!

TNPSC - MadrasHC

அரசுப்பணிக்கு தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க, ஒரு மாதத்தில் விசாரணைக்குழு அமைக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டள்ளது. 2015-ல் குரூப் 2 தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற சாய்புல்லா என்பவரை தேர்வு செய்ய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து TNPSC தேர்வாணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தேர்வு தொடர்பாக உண்மை தகவல்களை மறைத்ததாக தேர்வாணைய அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை … Read more

கொடநாடு வழக்கு – ஈபிஎஸ் சாட்சியப்பதிவு தாக்கல்..!

EPS

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க கோரியும் ரூ. 1 கோடியே 10 லட்சம் மான நஷ்ட ஈடு கேட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்தது. இதற்கிடையில், இந்த வழக்கில் தனது சாட்சியத்தை பதிவு செய்ய உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்திற்கு நேரடியாக வருவதற்கு பதிலாக … Read more

தப்பித்தார் பொன்முடி.! சரணடைவதில் இருந்து விலக்கு அளித்த உச்சநீதிமன்றம்.! 

Supreme court of India - Ponmudi

கடந்த 2006 முதல் 2011 வரையில் திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த பொன்முடி, தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்சஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை முதலில் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி அவர்களை நிரபராதி என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 3 … Read more

3 ஆண்டுகள் சிறைதண்டனை.! தப்புவாரா பொன்முடி.? இன்று விசாரணை.! 

Supreme court of India - Ponmudi

முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. கடந்த 2006 முதல் 2011 வரையில் திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித்துறை மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த பொன்முடி, தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது கடந்த 2011இல் அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்சஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.  பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் … Read more