#BREAKING: அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் ..!

அன்னை தமிழில் அர்ச்சனை’ திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி  வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஸ்ரீரங்கத்தை சார்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழக கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதை எதிர்த்தும்,  சமஸ்கிருத மொழில் மட்டும்தான் அர்ச்சனை செய்யவேண்டும் என தனது மனுவில் தெரிவித்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் … Read more

#BREAKING : சபாநாயகருக்கு மட்டுமே இந்த அதிகாரம் உள்ளது…! – உயர்நீதிமன்றம்

சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களை எங்கு அமர வைக்க வேண்டும் என முடிவெடுக்க சபாநாயகருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருதக் கூடாது என்று கோவையை சேர்ந்த லோகநாதன் என்பவர்  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களை எங்கு அமர வைக்க வேண்டும் என முடிவெடுக்க சபாநாயகருக்கு மட்டுமே அதிகாரம் … Read more

Breaking:” 3 ஆம் பாலினத்தவரை துன்புறுத்தினால் நடவடிக்கை” – உயர்நீதிமன்றம் உத்தரவு..!

3 ஆம் பாலினத்தவரை காவல்துறையினர் துன்புறுத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 3 ஆம் பாலினத்தவர்களான திருநங்கைகள்,திருநம்பிகள் ,ஓரினச்சேர்க்கையாளர்களைத் துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி,நடவடிக்கை எடுக்க  புதிய விதிமுறைகள் கொண்டு வருமாறும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து,3 ஆம் பாலினத்தவரை துன்புறுத்தக் கூடாது என காவல்நிலையத்துக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றும், அவர்களை … Read more

உணவு பொருட்களை கையாள்பவர்கள் கையுறை பயன்படுத்த கட்டாயமாக்க வேண்டும்- உயர்நீதிமன்றம் ..!

உணவு பொருட்களை கையாள்பவர்கள் கையுறை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உணவு விநியோகம் செய்வோர், பார்சல் பேப்பர்கள், கவர்களை பிரிக்க எச்சில் தொட்டு பயன்படுத்துவதால் தொற்று பரவும் அபாயம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்  உணவு பொருட்களை கையாள்பவர்கள் கையுறை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஆரோக்கியத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக்கூடாது, வரும்முன் … Read more

சொத்து வரி செலுத்தாதவர்களின் விவரங்கள் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

சொத்து வரி செலுத்தாதவர்களின் விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல்லை சேர்ந்த ஒரு தனியார் பொறியியல் கல்லூரி,கூடுதல் சொத்து வரியை செலுத்தும்படி,நாமக்கல் தட்டான்குட்டை கிராம பஞ்சாயத்து சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதனை எதிர்த்து அக்கல்லூரி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில்,இந்த வழக்கு,சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, அதிக கட்டணம் வசூலித்து வணிக நோக்கில் செயல்படும் கல்வி நிறுவனங்கள் வரி … Read more

#Breaking:கோடநாடு வழக்கில் மீண்டும் விசாரணை – தீர்ப்பு ஒத்திவைப்பு..!

கோடநாடு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கலான பிறகு மீண்டும் விசாரணைக்கு தடை வித்திக்க கோரும் வழக்கில் தீர்ப்பு வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோடநாடு கொலை ,கொள்ளை தொடர்பாக காவல்துறை விசாரணையை விரிவுப்படுத்தியுள்ளது.இந்த விசாரணையில் தனக்கு சில நபர்கள் பாதிப்பு ஏற்படுத்துவதாகவும்,காவல்துறைக்கு ஏற்றவாறு சாட்சி சொல்ல தன்னை கட்டாயப்படுத்துவதாகவும்,எனவே,இந்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும்,இது தொடர்பாக நீலகிரி நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும்  கூறி கோயம்புத்தூரை சேர்ந்த ரவி என்பவர் சென்னை உய்ரநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில்,இந்தவழக்கு இன்று … Read more

#பரோல் # விவகாரம்-“சிறை விதி”யை திருத்துங்கள்! – கோர்ட் அதிரடி

கைதிகளுக்கு பரோல் கிடைக்க வகைச்செய்யும் சட்டத்தில் திருத்தம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. அங்கையற்கண்ணி  என்பவர் சென்னையை சேர்ந்தவர் இவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:ஒரு வழக்கில், என் கணவருக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனையானது விதிக்கப்பட்டது. சென்னை, புழல் சிறையில், 16 மாதங்களுக்கு மேலாக இருந்து வருகிறார். எங்களுக்கு, 2 மகள்கள் உள்ளனர். அவர்கள், கல்லுாரியில் படித்து வருகின்றனர்.குழந்தைகளின் படிப்பு செலவுக்கும், குடும்ப செலவுக்கும், சிரமாக உள்ளது. பணம் ஏற்பாடு செய்ய, … Read more

தனி மையானம் அமைத்து சாதி பிரிவினையை தமிழக அரசே ஊக்குவிப்பதா -சென்னை உயர்நீதிமன்றம்

வேலூர் அருகே பாலத்தின் மேலிருந்து சடலம் கயிறுகட்டி இறக்கப்பட்டதுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே  பட்டியலினத்தை சேர்ந்த குப்பன் என்பவர் ஒரு விபத்தில் இறந்துவிட அவரது உடலை தங்கள் நிலத்தின் வழியாக கொண்டு செல்லக்கூடாது என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர் .இதனால் அவரது உறவினர்கள் வேறுவழியின்றி 20அடி  உயரத்தில் பாலத்தின் மேலிருந்து கயிறுகட்டி இறக்கினர்.இந்த செயல் சமூக வலைதளங்களில் பரவ பெரிய விவாதத்திற்கு உள்ளாக்கியது . இந்த தகவல் அறிந்து சென்னை உய்ரநீதிமன்றம் … Read more