சொத்து வரி செலுத்தாதவர்களின் விவரங்கள் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

சொத்து வரி செலுத்தாதவர்களின் விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல்லை சேர்ந்த ஒரு தனியார் பொறியியல் கல்லூரி,கூடுதல் சொத்து வரியை செலுத்தும்படி,நாமக்கல் தட்டான்குட்டை கிராம பஞ்சாயத்து சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதனை எதிர்த்து அக்கல்லூரி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில்,இந்த வழக்கு,சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, அதிக கட்டணம் வசூலித்து வணிக நோக்கில் செயல்படும் கல்வி நிறுவனங்கள் வரி … Read more

கருணை கொலை செய்ய அனுமதி கோரி தஞ்சை ஆட்சியரிடம் மனு அளித்த துப்பரவு பணியாளர்.!

இயந்திரத்தில் சிக்கி கை துண்டான தற்காலிக துப்புரவு பணியாளர் தன்னை கருணை கொலை செய்ய அனுமதி கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள வடக்கு தெருவில் வசித்து வருபவர் ரேவதி. பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கின் மீது நுண் உரம் செயலாக்க மையத்தில் பணிபுரிந்து வந்தார். அங்கு மக்கும் உரங்களையும், மக்காத உரங்களையும் பிரித்தெடுத்து அதனை இயந்திரத்தில் மாற்றி வேலை செய்து … Read more

புதிய ஆட்சியர் அலுவலகம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு!

புதிய ஆட்சியர் அலுவலகம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பல்வேறு அலுவலகங்களுடன் கூடிய கட்டடத்திற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில், செங்கல்பட்டில் ஆட்சியர் அலுவலகம் கட்ட ரூ.119 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சியில் ஆட்சியர் அலுவலகம் கட்ட ரூ.104 கோடியும், திருப்பத்தூரில் ஆட்சியர் அலுவலகம் கட்ட ரூ.109 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.