கழிவுகளையும் செல்வமாக மாற்ற முடியும் என்பதற்கு காஞ்சிரங்கால் கிராமம் ஓர் உதாரணம் – பிரதமர் மோடி பாராட்டு

வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் காஞ்சிரங்கால் கிராம மக்களை பாராட்டினார். மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் தெரிவித்து, பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொரு பண்டிகையின் பின்னாலும் ஒரு செய்தி மறைந்திருக்கிறது. இதுபோன்ற பண்டிகைகளை அடுத்த தலைமுறையினருக்கு நாம் எடுத்து செல்லவேண்டும். நாம் நமது பண்டிகைகளின் பின்னால் உள்ள அறிவியலை அறிந்து கொண்டாட வேண்டும். இன்றைய இளைஞர்களிடம் விளையாட்டு … Read more

பால் மணம் மாறா பிஞ்சுகளுக்கு வாழ்வு கொடுத்த சிவகங்கை ஆட்சியர்… மனிதநேயமிக்க எம்.எல்.ஏ மற்றும் சமுக ஆர்வலர்கள்…

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த  மானாமதுரை மாரி (28) என்பவர்  அப்பகுதியில் கூலி வேலை செய்து வருபவர்.  இவருக்கு திவ்யா (22) என்ற பெண்ணுடன் திருமணமாகி கடந்த டிசம்பரில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த சில நாட்களிலேயே ஒரு குழந்தை இறந்துவிட்டது. மற்றொரு குழந்தையுடன் வீடு திரும்பிய பெற்றோர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அந்த  பெண் குழந்தைக்கு மலம் தொப்புள் வழியே வெளியேறியதால் மறுபடியும் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தனியார் மருத்துவமனையில் அந்த் குழந்தைக்கு அறுவை … Read more

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சூரக்குடி பகுதியை சேர்ந்தவர் குமார்.இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 10 வயது  சிறுமியை ஏமாற்றி யாருக்கும் தெரியாமல் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் அந்த மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார்.அப்போது மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டின் முன்பு திரண்டுள்ளனர்.இதை அறிந்த குமார் தப்பி ஒளிந்து கொண்டார். இதனை தொடர்ந்து உள்ளே வந்த அக்கம்பக்கத்தினர் மாணவி மீட்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு … Read more

சிவகங்கையில் முத்தரசன் பேட்டி!பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் …..

சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழக அரசு திடீரென்று பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களும், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினரும் போராடி வருகின்றனர். எனவே அரசு உடனடியாக பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். ஆனால் கட்டண உயர்வை திரும்ப பெறுவது குறித்த மறுபரிசீலனை இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. போக்குவரத்துக்கழகங்கள் நஷ்டத்தில் இயங்க மிக … Read more

சிவகங்கையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் !

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கடந்த 2 தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளிருப்பு போராட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்று தங்களது எதிர்ப்பை அவர்கள் தெரிவித்து வருகின்றனர். பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று அக்கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர். போராட்டத்தின்போது, ‘பின்தங்கிய மாவட்டத்தில் உள்ள எங்களது பெற்றோர் வருமானமே ரூ.200 தான். அதில் பாதி பஸ் கட்டணத்திற்கு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் எங்களது பெற்றோர் குடும்ப … Read more