கழிவுகளையும் செல்வமாக மாற்ற முடியும் என்பதற்கு காஞ்சிரங்கால் கிராமம் ஓர் உதாரணம் – பிரதமர் மோடி பாராட்டு

வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் காஞ்சிரங்கால் கிராம மக்களை பாராட்டினார்.

மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் தெரிவித்து, பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொரு பண்டிகையின் பின்னாலும் ஒரு செய்தி மறைந்திருக்கிறது. இதுபோன்ற பண்டிகைகளை அடுத்த தலைமுறையினருக்கு நாம் எடுத்து செல்லவேண்டும். நாம் நமது பண்டிகைகளின் பின்னால் உள்ள அறிவியலை அறிந்து கொண்டாட வேண்டும்.

இன்றைய இளைஞர்களிடம் விளையாட்டு மீதான காதலையும், ஆர்வத்தையும் பெருமளவில் பார்க்க முடிகிறது. கிராமங்களில் தொடர்ச்சியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். 4 தசாப்தங்களுக்கு பிறகு ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய வீரர்கள் திறமையை நிரூபித்துள்ளனர். ஒவ்வொரு குடும்பமும் விளையாட்டை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் கிராமத்தில் மக்கள் உதவியுடன் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுவதாக தெரிவித்த பிரதமர் மோடி, கழிவுகளையும் செல்வமாக மாற்ற முடியும் என்பதற்கு காஞ்சிரங்கால் கிராமம் ஓர் உதாரணம் என்று பாராட்டினார். மேலும், ஒவ்வொருவரின் பங்களிப்பின் மூலம் இந்தியா பல உச்சங்களை அடைய முடியும் எனவும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்